(Reading time: 5 - 10 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

   

பின், ஒரு வழியாக அவனை சமாதானப் படுத்தி அறையை விட்டு அழைத்து சென்றாள் இந்து!

   

எப்போதும் எட்டு மணிக்கு முன் காலை உணவு உண்பவர்கள் அன்று பதினொன்று மணிக்கு மேல் தான் அவர்களின் அறையை விட்டே வெளியில் வந்தார்கள். காஞ்சனாவும் கீதாவும் அதை கவனிக்காமல் இல்லை! ஆனால், அவர்கள் இருவருக்குள் எல்லாம் சரி ஆனால் சரி தான் என நினைத்து, ஒருவரை ஒருவரை பார்த்துக் கொண்டதை தாண்டி எதையும் கண்டுக்கொள்ளாமல் இருந்தார்கள் காஞ்சனாவும், கீதாவும்.

   

❀✿❀✿❀✿

   

அன்றைய நாள் முழுவதும் இந்துவிற்கு கணவனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடிலும், அவனுக்கான ஸ்பெஷல் சமையலிலுமாக நேரம் பறந்து சென்றது!. மறக்காமல் அவன் விரும்பிய குலாப் ஜாமுனையும் தயார் செய்து வைத்தாள். கீதாவின் கேலி பார்வை கண்ணில் பட்டாலும் அதை கண்டுக் கொள்ளாமல் மற்ற வேலைகளை கவனித்தாள்.

   

அன்று மாலை ஐந்து மணி அளவிலேயே வீடு திரும்பிய சஞ்சீவ், மனைவி பின்னே குட்டி போட்ட பூனை போல் சுற்றி திரிந்துக் கொண்டிருந்தான். அவனை பார்த்து அவ்வப்போது புன்னகையை பகிர்ந்துக் கொண்டதற்கு மேல் இந்து எதுவும் செய்யவில்லை. சஞ்சீவின் திடீர் மாற்றத்தை கவனித்து விட்டு,

   

“என்ன இந்து மாயம் செஞ்ச??? சஞ்சீவ் ஏதோ மந்திருச்சு விட்ட கோழி போல இருக்கார்...” என தோழியிடம் கேலியாக கேட்டாள் கீதா.

   

“தெரியலையே அக்கா... ஒருவேளை ர

{/f90filter}

ாஜீவ் கிட்ட டிப்ஸ் கேட்டு வாங்கி இருப்பாரோ?”

   

“இந்து!”

   

“பின்னே என்ன அக்கா, ராஜீவ் தான் இதுல பிஹெச்டி... சஞ்சீவ் எல்லாம் வெறும் எல்.கே.ஜி தான்...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.