தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 12 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
உதய், "... ரொம்ப இம்பார்டன்ட்... கொஞ்சம் கவனத்தோட செய்ங்க," என எதையோ பற்றி சொல்லிக் கொண்டிருந்தான்.
"ஓகே உதய்..." என அவனுக்கு பதில் சொன்ன நாகலட்சுமி, உதயின் பார்வை நந்திதா பக்கம் செல்வதை கவனித்து விட்டு,
"இவங்க நந்திதா... புது ஸ்டாஃப்.... நம்ம ஆர்&டி டிபார்ட்மென்ட்க்காக புதுசா ரெக்ரூட் செஞ்சவங்க," என்று அவளை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
"ஓ, யெஸ்... ஹலோ நந்திதா!" என்றபடி உதய் கையை நீட்ட, நந்திதா புன்னகையுடன் எந்த தயக்கமும் இல்லாமல் அவனிடம் கை குலுக்கினாள்.
"நீங்க எங்க கம்பெனி ஜாயின் செய்திருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்க திறமை பத்தி எனக்கு ரொம்ப நல்லா தெரியும்... நீங்க காலேஜ்ல உங்க தர்ட் இயர்ல சிம்போசியம்ல ப்ரசென்ட் செய்த டாபிக் எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கு. உங்களுக்கு தெரியுமோ என்னவோ அது போல ஒரு ப்ராடக்ட் லாஸ்ட் இயர் தான் லாஞ்ச் ஆச்சு! யூ ஆர் வே அஹெட் ஆப் யுவர் டைம் நந்திதா! அது போல உங்களோட ஐடியாஸ், இன்னோவேஷன்ஸ் எல்லாத்தையும் எந்த தடையும் இல்லாமல் எதைப் பத்தியும் கவலைப் படாமல் எடுத்து செய்ங்க. நம்ம நதி எம்படட் சாப்ட்வேர் இந்த துறையிலேயே பெஸ்ட்ன்னு பேர் வாங்கனும்... உங்க பங்களிப்பை ரொம்ப எதிர்பார்க்கிறேன்..."
நந்திதாவிற்கு உதய் சொன்னதில் பாதி தான் கவனத்தில் பதிந்தது. அவளின் மனம் அப்போதும் உதயின் கைக்குள் அடங்கி இருந்த அவளின் வலது கரத்தின் மீதே இருந்தது...
கை குலுக்கிய உதய், பேச்சு சுவாரசியத்தில் அவளின் கையை விட மறந்து விட்டான் போலும் (!!!!). ஆனால் நந்திதாவிற்கு அப்படி அவனின் கைக்குள் தன் கையை வைத்தப்படி பேசுவது கடினமாக இருந்தது...
ஆனால் அதற்காக கையை இழுத்துக் கொள்ளவா முடியும்...