ப்ரசென்டேஷனை பார்க்க ஆரம்பித்தாள்!
❀✿❀✿❀✿
"ஹேய் நந்து! ஃபர்ஸ்ட் டே எப்படி போச்சு? வேலை பிடிச்சிருக்கா?"
வேலையில் இருந்து திரும்பிய தோழியைப் பார்த்து ஆர்வத்துடன் கேட்டாள் துளசி.
"ரொம்ப சூப்பரா போச்சு ஒசிமம்! உன்னோட பின்னுக்கு ஆயிரம் நன்றிகள். இந்த புடவையை பத்தி கவலை பட வேண்டிய அவசியமே இருக்கலை..."
"பின்ன துளசி செய்தா சும்மாவா????"
"போதும் உன்னோட பீத்தல்ஸ்... ரொம்ப இன்ட்ரஸ்டிங் ஜாப் ஒசிமம்! நல்ல ரோல்! எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! இன்னும் வேலை ஸ்டார்ட் செய்யலை ஆனாலும் ரொம்ப ஆர்வத்தோட இருக்கேன்..."
"உன்னை மாதிரி படிப்ஸ்க்கு எல்லாம் வேற என்ன வேலை? என்னோட குட்டி செல்லமும் உன்னை போல போலருக்கு... எப்போ பாரு ஏதாவது புக் பார்த்துட்டே இருக்கனும் அவளுக்கு..."
"சாஹித்யாக்கு சரத் ஜீன்ஸ் அதிகமா வந்திருக்கும். நல்லவேளை, அவளாவது கொஞ்சமாவது புத்திசாலியா இருப்பா!"
"ஹேய், அப்போ நான் என்ன மக்கா?"
"இதை வேற நான் தனியா சொல்லனுமா???"
"போடி..."
"உண்மையை சொன்னா வர கோபத்தை பாரு...."