நாகுவின் லேப்டாப்பில் ஓடிய அந்த பிரசன்டேஷனில் அவர்களின் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களும், அதில் நிறுவப்படும் சாஃப்ட்வேர் பற்றிய விபரங்களும் இருந்தன.
ஒவ்வொரு மாதமும் ஆர்டர் பெருகி வருவது தெரிந்தது...
ஆர்வத்துடன் புள்ளி விபரங்களை கவனித்துக் கொண்டிருந்த நந்திதாவிற்க்கு, அவளை யாரோ பார்ப்பது போன்ற உணர்வு தோன்றியது...
இது இன்று இரண்டாவது முறை!
சட்டென்று தலை திருப்பி பார்த்தவள், உதயின் பார்வை அவள் மீது இருப்பதை கவனித்தாள்.
என்ன ஏதென்று புரியாமல் அவள் பார்க்க, உதய் கண் இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்...
நந்திதாவினுள் மெல்லிய எரிச்சலும், கோபமும் பொங்கும் போதே, அந்த வேறுபாடும் அவளுக்கு புரிந்தது...
உதயின் பார்வை அவள் மீது இருந்தாலும் அவனின் கவனம் அவளிடம் இல்லை என்று தோன்றியது...
அவனின் கண்கள் சிந்தனையை காட்டியது.
ஏதோ சிந்தனையில் இருக்கிறான் போலும்... எங்கே பார்க்கிறான் என்ற உணர்வே இல்லாமல் அவனின் பார்வை இருக்கிறது!
அவள் தான் அவனை தவறாக நினைத்து விட்டாள்!
அவசரமாக பார்வையை திருப்பி நாகுவின் லேப்டாப்பில் ஓடிக் கொண்டிருக்கும்