(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

உதய் பேசி முடிக்க காத்திருந்தவள்,

   

"கட்டாயம் என்னுடைய பெஸ்ட் பர்ஃபார்மன்ஸ் கொடுக்குறேன் சார்," என்றப்படி, மெல்ல அவளின் கையை இழுத்தாள்.

   

விஷயம் புரிந்துக் கொண்டவனாக,

   

"சாரி," என்றபடி அவளின் கையை விடுவித்த உதய்,

   

"நம்ம கம்பெனில சார், மேடம் இதுக்கு எல்லாம் இடம் கிடையாது. என்னை உதய்ன்னு கூப்பிடுங்க. நீங்க இங்கே ஜாயின் செய்திருப்பது கம்பெனிக்கு ஒரு திருப்புமுனையா இருக்கும்னு நம்புறேன்... குட் லக்," என்றான்.

   

பின் நாகலட்சுமி பக்கம் பார்த்து,

   

"நம்ம ப்ரொடக்ஷன் ஸ்டாட்ஸ் கொஞ்சம் பார்க்கனும், இப்போ டீடைல்ஸ் இருக்கா நாகு?" எனக் கேட்டான்.

   

"ரெடியா இருக்கு உதய்... கான்ஃபரன்ஸ் ரூம் புக் செய்யலை, ஏதாவது ரூம் ஃப்ரீயா இருக்கான்னு பார்க்கவா?" என நாகு கேட்கவும்,

   

"வேண்டாம்! இங்கேயே ஃபாஸ்ட்டா ரன் செய்து பார்த்திருவோம்...” என்ற உதய், “நந்திதா, உங்களுக்கு எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லையே?" என நந்திதாவிடம் வினவினான்.

   

"நோ உதய்... நானும் அந்த பிரெசென்டேஷன் பார்க்கலாமா?" என ஆர்வத்துடன் கேட்டாள் நந்திதா.

   

"வை நாட்? ப்ளீஸ் ஜாயின் அஸ்,” என முழு மனதுடன் அவளுக்கு அனுமதி கொடுத்தவன், “நீங்க ப்ளே செய்ங்க நாகு... அண்ட் ப்ளீஸ் சிட் டவுன்... எனக்காக இப்படி எழுந்தெல்லாம் நிக்க வேண்டாம்..." என்று சொல்லி விட்டு அவனும் ஒரு நாற்காலியில் அமர்ந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.