(Reading time: 5 - 10 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

   

இதே ரீதியான கேலி கலாட்டா பேச்சு இருந்தாலும், இந்து தன் வேலையிலும் மும்முரமாகவே இருந்தாள்!

   

❀✿❀✿❀✿

   

மனைவியின் ஸ்பெஷல் இரவு உணவை ஒரு வெட்டு வெட்டி விட்டு, அவளின் விருப்பம் போல இரவு பன்னிரண்டு மணி வரை காத்திருந்து, குடும்பத்தினர் அனைவரும் சூழ்ந்திருக்க கேக் வெட்டி தன் பிறந்தநாளை கொண்டாடினான் சஞ்சீவ். வெட்டிய முதல் கேக் துண்டை இந்து பக்கம் அவன் நீட்ட, அதை தடுத்து, காஞ்சனாவிற்கு ஊட்ட சொன்னாள் இந்து. காஞ்சனா அவளின் அன்பில் நெகிழ்ந்துப் போனாள். இரண்டு மருமகள்களும் அன்பானவர்களாக அமைந்து விட்டதில் அவளுருக்கு மனதில் சந்தோஷம் பொங்கியது. கூடவே, அவளின் விருப்பம் போல் சீக்கிரமே ஒரு பேரனோ பேத்தியோ பிறக்க போகும் எக்ஸ்ட்ரா சந்தோஷத்தில் அவளுக்கு பத்து வயது குறைந்து விட்டதாகவே தோன்றியது.

   

ஒவ்வொருவரும் சஞ்சீவிற்கென வாங்கி வைத்திருந்த பரிசுகளை அவனிடம் கொடுத்தார்கள். ஒருவழியாக பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து அவரவர் அறைக்கு திரும்பினார்கள். இந்துவிற்கு அதுவரை இல்லாத தயக்கம் அப்போது தோன்றியது. பெண்ணுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்தால் அவர்களின் அறைக்கு உடனே செல்லாமல் தயங்கி நின்றாள். வழக்கம் போல அவளிடம் இரவு வணக்கம் சொல்லி விட்டு தன் அறை பக்கம் செல்ல திரும்பிய கீதா, இந்துவின் தயக்கத்தை கவனித்து விட்டு என்ன என்பது போல அவளை பார்த்தாள். என்ன சொல்வது என்று புரியாமல், ஒன்றுமில்லை என தலை அசைத்து விட்டு, தயக்கத்துடன் அவர்களின் அறையினுள் நுழைந்தாள் இந்து.

   

அவளுக்காகவே அங்கே பொறுமை இல்லாமல் காத்துக் கொண்டிருந்தான் சஞ்சீவ்.

   

“இந்து ச

{/f90filter}ெல்லம், எவ்வளவு நேரம்,” என்று குறைப் பட்டப்படி அவளருகில் வந்தவன், அவள் முகத்தில் இருந்த தயக்கத்தையும் வெட்கத்தையும் புரிந்துக் கொண்டான். அவன் முகத்திலும் புன்னகை தோன்றியது.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.