Chillzee Originals : தொடர்கதை - எங்கேயோ பார்த்த மயக்கம் - 08 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
"அப்படி என்ன அவ்வளவு முக்கியமா அந்த செல் ஃபோன்ல ஆராய்ச்சி செய்றீங்க?"
திடீரென தேன்மொழியின் குரல் பக்கத்தில் கேட்கவும் நம்ப முடியாமல் தலை நிமிர்ந்து பார்த்தான் சத்யா. அங்கே உண்மையாகவே தேன்மொழி தான் நின்றிருந்தாள்!!!! அவன் முதல் முதல் அவளைப் பார்த்த போது அவள் கட்டி இருந்த அதே பச்சை நிற பட்டு புடவையில் இருந்தாள்! கண்ணால் பார்ப்பதை நம்ப முடியாமல்,
"தேன்மொழி!!!???" என வியப்புடன் கேட்டுக் கொண்டே, கனவா, நனவா என புரியாது சத்யா கையில் கிள்ளிப் பார்க்கவும், தேன்மொழி கண் சிமிட்டி சிரித்தாள்.
சத்யாவும் அசடு வழிய சிரித்தான். கூடவே, “நீங்க எங்கே இங்கே????” என வினவவும் செய்தான்!
“இது நான் உங்களை கேட்க வேண்டிய கேள்வி! ஏன்னா, இது என் வீடு...”
“ஆனா...” பேசத் தொடங்கும் போதே சத்யாவிற்கு மண்டையில் பல்ப் எரிந்து விஷயம் புரிந்தது.
“ஹேய், அப்போ நீ சொன்ன அந்த பெண் பார்க்கும் ஆள் நான் தானா???”
வெட்கம் மின்ன, ஆம் என்று தலை அசைத்தாள் அவள்...
"நேத்தே இதை என் கிட்ட சொல்றதுக்கு என்ன?" கொஞ்சம் கோபத்துடன் கேட்டான் சத்யா!
"அத்தை எதுக்கு உன் கிட்ட சொல்லாம மறைச்சாங்கன்னு எனக்கு தெரியாதே... அதான் நானும் சொல்லலை..." என்றாள் அவள் புன்னகையோடு.
கோபத்துடன் எதையோ சொல்ல தொடங்கிய சத்யா, தேன்மொழியின் பேச்சையும், அதில் இருந்த மாற்றத்தையும் புரிந்துக் கொண்டு,
"அத்தை??? அம்மாவை அத்தைன்னா சொன்ன???? அப்போ நம்ம கல்யாணத்துக்கு நீ எஸ்