(Reading time: 5 - 10 minutes)

12. கரை ஒதுங்கும் மீன்கள் - அருணா சுரேஷ் 

 Karai othungum meengal

னி என்ன செய்வது…? எதற்கும் வீட்டுக்கு வந்திருப்பாங்களோ ?.....என்று பார்த்து விட்டு வரலாம் என்ற தீபக்கை முறைத்தான் தயா.

 

"அப்புறம் ஏண்டா….எனக்கு ஃபோன் பண்ணலை?"

 

"அதான் என்ன பிரச்னைன்னு தெரிலியேடா……..அல்லது வா ஆஃபீசுக்குப் போய் விசாரித்து விட்டு வரலாம்…..”

 

"நாந்தான் விசாரிச்சுட்டேனே…..இனி போய் விசாரிச்சா என்ன நினைப்பாங்க?.....”

 

"இப்போ அதுவாடா முக்கியம்? எங்கிருந்தாவது ஆரம்பிக்கணும்தானே?”

 

"சார் நான் ஒண்ணு சொல்றேன் தப்பா நினைக்காதீங்க…….அப்படி வேணும்னே போயிருந்தால் வீட்டுலே ஏதாவது  எழுதி அல்லது ஒரு ஹின்ட்  வச்சுருப்பாங்க…..எதற்கும் வீட்டுக்குப் போய்ப் பார்த்துட்டு வந்துரலாம் வாங்க…” என்றான் ரவி.

 

“எதற்கும் ஒரு கம்ப்ளெயின்ட் குடுத்துட்டே போயிரலாமா…..”

 

“அட….வீட்டுக்குப் போயிட்டு அப்புறம் யோசிக்கலாம்……கெளம்பு தயா..” என்றவாறு தீபக் வண்டியை எடுத்தான்.

 

ரவி மெதுவாக…..”இவன் கிட்டே ஏதோ தப்பு இருக்குடா……ஏதோ வில்லங்கம் புடிச்சவனாத் தெரியிறான்…..” என்றான்.

 

“அதான் நான் கதை கதையாய் சொல்லிருக்கேனே…….”

 

யா  வேண்டுமென்றே வண்டியை மெதுவாக ஓட்டுவது போலத் தெரிந்தது. வீடு வந்து சேர்வதற்குள்  ரெண்டு தடவை வண்டியை நிறுத்தி  யாரோ கூப்பிட்டது போல மொபைலை எடுத்துப் பார்த்துக் கொண்டான்.

 

“டேய் லைட் எரியுதுடா…..சிஸ்டர் வந்துட்டாங்க போல….” என்றான் தீபக்.

 

“நான் வரும் போது லைட் எரிய விட்டுத்தான் வந்தேன்”

 

வண்டியை நிறுத்தும் சத்தம் கேட்டவுடன் வீட்டின் கதவு திறந்தது. ஷைனி  வெளி வந்தவுடன் மூன்று பேரையும் அந்த நேரத்தில் எதிர்பார்க்காதவள்  ஒரு விதமான முக இறுக்கத்துடன் பார்த்தாள்.

 

“எங்கே போய்த் தொலைஞ்சே?”

 

”உள்ளே வாங்க….உள்ளே வந்து பேசுங்க…..”

 

“உன் வண்டவாளம் எல்லாருக்கும் தெரிஞ்சுருமோன்னு பயம்மாருக்கா…..? எங்கே போய்த் தொலைஞ்சேன்னு கேட்டேன்…..?”

 

“காலைலியே….”  என்று ஏதோ சொல்ல வந்தவளைச் சொல்ல விடாமல்……..”ஆமாமா….காலைலே  சண்டை போட்டா சாயங்காலம் இப்பிடித்தான்  பாடு படுத்தணும்……ஆ  ஊன்னா  எதுத்து எதுத்து பேசு…..” என்று கத்தினான்.

 

“டேய் தயா……ஏண்டா எதுக்கு இப்பிடிக் கத்துறே?.....வா உள்ளே போய்ப் பேசலாம்….” தீபக்.

 

ன்றும் பேசாமல் வண்டியை உள்ளே வைத்து விட்டு தயா வரும் வரை  ரவியும் தீபக்கும் ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டு அமைதியாக  உள்ளே போவதா வேண்டாமா என்பது போல நின்று கொண்டிருந்தனர்.

 

ஷைனி ஒரு வார்த்தையில் அழுது விடுபவள் போல இருந்தாள். அந்நியர்கள் முன்னால்  திட்டுகிறானே  என்று குறுகி நின்றாள்.

 

“பதில் சொல்றாளா பாரு…..இப்பிடிச் செஞ்சா கோபம் வருமா வராதாடா தீபக் நீயே சொல்லு……எங்கே போறேன் வரேன்னு ஒரு   வார்த்தை சொல்லிட்டுப் போனா என்ன? இதைக் கூடக் கேட்கக் கூடாதுன்னா எப்பிடிரா?”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.