(Reading time: 5 - 10 minutes)

ரி விடு தயா….எதாவது பிரச்னையா இருக்கும் ….மெல்ல நிதானமாக் கேளு…..அவங்களே மிரண்டு போயிருக்காங்க…நீ வேற மெரட்டுனா பாவம்……விடுறா….அப்புறமாக் கேளு…” என்று சொன்னாலும் தீபக்  ‘ இவ்வ்ளோ கத்தினாலும்  கம்னு இருக்காளே …..எங்கதான்  போனேன்னு சொன்னாக் குறைஞ்சா போகப் போறாங்க…….அழுத்தம் புடிச்சவதான்னு ‘ மனசுக்குள் நினைத்துக்  கொண்டான்.

 

“சரிடா…ப்ராப்ளம் சால்வ்ட்….நம்ம கெளம்பலாம்…..” என்று ரவி எழுந்து கொண்டான்.

 

“அட…அதெப்பிடி…….எனக்காக போலீஸ் ஸ்டேஷன்லாம் அலைஞ்சுருக்கீங்க….. இன்னிக்கு எங்க வீட்டுலே சாப்பிட்டுத்தான் போகணும்” என்றான் தயா.

 

ஏற்கெனவே சாப்பாட்டுக்கு வந்து பட்ட அவஸ்தையை  நினைத்து  “அச்சச்சோ……அதெல்லாம் வேண்டாம்டா ….நாங்க கெளம்புறோம்”  என்று  பதறினான் தீபக்.

 

“அதுக்கேண்டா…இவ்வ்ளோ பதறுறே?....ஷைனி சமையல் என்ன அவ்வ்ளோ மோசமாவா இருந்துச்சு?”

 

“இல்லேடா நாங்க கெளம்புறோம்”

 

“சரி சாப்பிட வேண்டாம்……..ஒரு டீயாவது குடிச்சுட்டுத்தான் போகணும்………ஷைனி  நல்லதா  ஏலக்காய் டீ போடும்மா………”

கொஞ்ச நேரம் முன்னால் கத்திய தயாவா….என்று இருந்தது.

 

ஏலக்காய் மணக்க மணக்க டீ ரொம்ப   நன்றாக இருந்தது. ஷைனியும்  ஹாலில் வந்து அமர்ந்து கொண்டது  இயல்பாக இருந்தது. கொஞ்சம் சூழ்நிலை  அமைதியாக இருக்கும் போதே கிளம்பி  விட்டால் நல்லது என்று நினைத்து அவசர அவசரமாக டீயைக் குடித்தான் தீபக்.  ரவி அதை விட அவசரமாக  விழுங்கினான்.

 

ஏதோ பேச வேண்டுமே என்பதற்காக

“போலீஸ்  ஸ்டேஷன்னு காதிலே  விழுந்தது…..  யாருக்கு  என்ன  பிரச்னை?..........ப்ராப்ளம் சால்வ்ட்  ஆயிருச்சா….?”

என்றாள் ஷைனி.

 

போச்சுரா……என்ன இவள்……..இவளைத்   தேடித்தான்  போலீஸ்  ஸ்டேஷன்  போனோம்னு கூடப் புரியலியா………இல்லை நடிக்கிறாளா….. குழப்பத்துடன் தீபக் பார்த்துக் கொண்டிருக்கும்   போதே  தயா  வைத்திருந்த டீ கப்   சுவரில் தூக்கியடிக்கப் பட்டது.

 

“உனக்குக் கொஞ்சமாவது  அறிவிருக்கா……செய்யறதையும் செஞ்சுட்டு   ‘ யாருக்கு  என்ன  பிரச்னை?......போலீஸ் ஸ்டேஷன் ஏன் போனீங்கன்னு வேற கேக்குறியா…..? இப்போ வரைக்கும்   எங்கே போய்த்  தொலைஞ்சேன்னு  சொல்லலை…….இதுலே கேள்வி வேற…..” 

 

“ப்ளீஸ் கத்தாதீங்க….”

 

“சரி கத்தலை….சொல்லு….எங்கே போய்த் தொலைஞ்சே…..?”

 

“காலைலியே….”

 

“காலைலேதான் சண்டை போட்டுத் தொலைஞ்சோம்னு எல்லோருக்கும்தான் சொல்லியாச்சே……..இன்னும் என்ன…..”

 

ரவி எழுந்து வெளியில் போய் ‘கெளம்புடா….’ எனச் சைகை செய்தான்.

 

இதை எப்பிடியாவது முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமேயென்ற எண்ணத்துடன்……..

 

“நீதான் சொல்லேம்மா எங்கே போனேன்னு…….” என்றான் தீபக்.

 

“என்னைச் சொல்லவிட்டால்தானே……காலைலியே சொல்லிட்டுதாண்ணா போனேன்……என் தோழி  கீர்த்தியின் அம்மாவுக்கு உடம்புக்கு முடியாமல் இருக்காங்க…….ரெண்டு நாளா   பார்க்கக் கூட்டிட்டுப் போங்கன்னு கெஞ்சியும் முடியாதுன்னு சொல்லியாச்சு….ஆஃபீஸிலிருந்து நேரா கீர்த்தி வீட்டுக்குப் பொயிட்டு  கொஞ்சம் லேட்டாதான் வருவேன்னு சொல்லிட்டுத்தாண்ணா   போனேன்……”

 

“ஒரு ஃபோன் பண்ணிருக்கலாமேம்மா…..அல்லது அவன் ஃபோனையாவது அட்டெண்ட் பண்ணிருக்கலாமேம்மா……?”

 

“ஃபோன் ரிப்பேராகி ரெண்டு நாளாச்சுண்ணா………சரி பண்ணக் கொடுத்திருக்காங்க……அவங்கதான் போய்க் கொடுத்துட்டு வந்தாங்க…..நான் காலைலியே சொல்லிட்டுப் போனதுனாலே    அவங்களுக்குத்தான் தெரியுமேன்னு  நானும் பேசாம இருந்துட்டேன்”

 

தீபக்கும் ரவியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு…’என்னலே நடக்குதிங்கேன்னு தலையைப் பிய்த்துக் கொண்டார்கள்….. அப்புறம் எதுக்கு தயா  இந்த நாடகத்தை நடத்தினான் என்று தலையும் வாலும் புரியாமல்  தயா வாயைத் திறப்பதற்காக  தீபக்கும் ரவியும்  காத்திருந்தார்கள்.  நாமும் காத்திருப்போம். 

தொடரும்

Karai othungum meengal - 11

Karai othungum meengal - 13

{kunena_discuss:678}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.