(Reading time: 21 - 41 minutes)

03. காதல் பயணம்... - Preethi

Kaathal payanam

தேஜஸ்ரீயின் வீடு பணக்காரர்களுக்கு பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட வீதியில் அமைந்திருந்தது. வீடே மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காண்போரை வெகுவாக கவர்ந்தது. நுழைவாயிலை நோக்கி நடந்த அனன்யாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது வீட்டில் வைக்கும் ஃபங்க்ஷன் என்று கூறியதாலே அது பெரிய விழாவாக இருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால் வீடே திருவிழா கோலம் பூண்டிருக்கக் கண்டு கொஞ்சம் ஆச்சர்யப்பட்டுதான் போனாள்.

வெளிப்புறம் இருந்த தோட்டத்தில் ஒரு மேடை அமைக்கப்பட்டு அதில் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவின் இனிமையை அழகூட்ட இசை கருவிகளில் மெல்லிசை பாடல்களை வாசித்துக்கொண்டு இருந்தனர். மேடைக்கு முன்பக்கமாக புள்மெத்தையில் நாற்காலிகள் போடப்பட்டிருந்தது, அதில் அமர்ந்திருந்த பலர் தங்களை மறந்து இசையில் மூழ்கினர்..

வானம் இருட்டி இரவு நேரம் தொடங்கி இருந்ததை அறிவிக்க, இரவின் சிலிர்ப்பூட்டும் காற்றும், பௌர்ணமி நிலவொழியும், புல்லாங்குழலின் மெல்லிசையும் வந்தவரை ரம்யமாக கவர்ந்தது...

வீட்டின் அழகை ரசித்தவாறு உள்ளே சென்ற அனு வாயிற்புரம் தேஜு நின்று வரவேற்று கொண்டிருந்ததை பார்த்து அவள் அருகில் சென்றாள். தேஜு அருகில் உள்ள தன் உறவுக்கார பெண்ணோடு பேசிக்கொண்டு இருக்க, விசிலடிக்கும் சத்தம் கேட்டு திரும்பிய தேஜு அனன்யா நின்றுக்கொண்டிருப்பதை கண்டு வாய் திறக்கும்முன் அனன்யா துடங்கினாள்.

“ஹே நூடுள்ஸ்ஸ்ஸ்ஸ், same pinch” என்று கூறிக்கொண்டே வந்து அவளை நன்றாக கிள்ளினாள்.

“அம்ம்ம்ம்ம்மா” என்று கத்தியவாறு கையை தேய்த்துவிட்டாள். “அய்யோ வலிக்குதுடி எதுக்குடி கிள்ளின?” வலியில் சிறிது சிடு சிடுவென விழுந்தாள்.

“எதுக்கா? சரியா போச்சுபோ மேல் மாடிதான் காலின்னு பார்த்தால் கண்ணும் தெரியலை  போல? பாரு நம்ம ஒரே மாதிரி டான்ஸ்க்கு வாங்கின ஷராராவ போட்டிருக்கிறோம். ஆனா நூடுள்ஸ் அன்னைக்கு விட இன்னைக்கு நீ சும்மா கலக்குறபோ பேருக்கு ஏற்றமாதிரி தேஜஸா ஜோளிக்கிற” என்று தேஜுவை பார்த்து கண்ணடித்து கூறினாள்.

இந்த ஷராராதான் அணிந்து வரபோவதாக தேஜுவிடம் முன்பு ஒரு நாள் கூறியது அனுவே தான், அவள் கூறிய பொழுதே விழாவில் தான் என்ன செய்யவேண்டும் என்றும் முடிவும் பண்ணி இருந்தாள் தேஜு, ஆனால் தான் கூறியவற்றை மறந்து தேஜுவின் திருவிளையாடல் தெரியாமல் பேசிக்கொண்டு இருந்தாள் அனு.

“சும்மா கிண்டல் பண்ணாதடி, ஆமா... எனக்கு தெரிஞ்சு ஒரே கலர்ல டிரெஸ் போட்டிருந்தால் தான் same pinch பண்ணுவாங்க நீ என்ன ஒரே மாதிரி உடைக்கெல்லாம் இப்படி கிள்ளுற?” என்று கேட்டாள்.

“ம்ம்ம்ம் எங்க ஊருள்ளலாம் அப்படித்தான் எப்பவெல்லாம் தோன்றுதோ அப்பவெல்லாம் கிள்ளுவோம்” என்று மீண்டும் அவளை கிள்ள முயற்சித்தாள்.

“உதை வாங்குவ சும்மா இருடி” என்று மிரட்டினாள். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருக்க “உன்னை பத்தி சொன்னேன்ல ஒரு பேச்சுக்காகவாது நான் எப்படி இருக்கேன்னு சொல்லேண்டி” என்று அனு கேட்க தேஜு தலையில் அடித்துக்கொண்டால் “இது ஒரு பொழப்பாடி சரி இந்த மரூன் ஷராரால ரொம்ப அழகா இருக்க, குட்டி பொம்மை மாதிரி போதுமா?!” என்று தேஜு கேட்கவும், ஷராராவை இருபுறமும் பிடித்துக்கொண்டு ஒரு காலை பின்னால் வைத்து தலையை சரித்து நன்றி கூறினாள் அனு...

“சரி ஏதோ அழாத குறையாய் சொல்றதால ஒத்துக்குறேன்” என்று கொஞ்சம் அவளை சீண்டி விட்டு “ஆனா நூடுள்ஸ் நீ இந்த பீகாக் ப்ளூ(peacock blue) ஷராராவில் நிஜமாவே அழகா பீகாக் மாதிரியே இருக்க, பாரு தோகை இல்லாத குறையைகூட உன் முடி ஃபுல் ஃபில்(full fill) பண்ணிடுச்சு” என்று தேஜுவின் தலையை வருடியவாறு கூறி சிரித்தாள்.

“அதானே பார்த்தேன் நீ என்னை புகழிரியா இல்லை கிண்டல் பண்ணுறியானே புரியலை போ” என்று அலுத்துக்கொண்டாள்.

அவள் முக வாட்டத்தை கண்டபின் மீண்டும் கிண்டல் பண்ண மனமின்றி “அட நிஜமாவேதான் நூடுள்ஸ் நீ ரொம்ப அழகா இருக்க” என்று அவள் தோள்மேல் கை போட்டு பிரியமாக கூறி அவள் முகம் மலர்வதை திருப்தியாக பார்த்தாள்.

“சரி சரி போதும் போதும் மாத்தி மாத்தி புகழ்ந்துகிட்டது யாராவது கேட்டாள் சிரிப்பாங்க “ என்று கூறி ஏதோ நினைவில் வெளியே பார்த்த தேஜுவின் கண்களில் குறும்பு தென்பட்டது அவளை தொடர்ந்து அனு பின்னாள் திரும்ப முயல அவளை தன் பேச்சிற்கு திருப்பினாள் தேஜு...

“ஏன் அனு நீ யாராக இருந்தாலும் same pinch பண்ணுவியா இல்லை பயந்திடுவியா?” என்று ரகசிய புன்முறுவலுடன் கேட்டாள்.

“நான் ஏன் பயப்பிடனும் யாராக இருந்தாலும் இந்த அனுகிட்ட இருந்து தப்பிக்க முடியாது” என்று வீர வசனமெல்லாம் பேசிகொண்டிருந்த அனுவை கண்டு தேஜுவிற்கு சிரிப்பாக இருந்தது.

“சரி சரி வா அம்மா அப்பாவை போய் பார்க்கலாம்” என்று அனுவை அழைத்து சென்றாள். இருவரும் பேசியவாறே தேஜுவின் தாய் லதாவிடம் சென்றனர்.

“வா அனு எப்படி இருக்க? நீ மட்டும் தான் வந்தியாமா? அம்மா வரலையா?” என்று பரிவாக கேட்டார் லதா. அவர் அணிந்து இருக்கும் உடையும் நகைகளும் தான் ஒரு நகைக்கடை உரிமையாளரின் மனைவி என்று பறைசாற்றியது எனினும் முகத்தை பார்த்தாலே சாந்த சொரூபியாக தோன்றும் லதாவை அனுவிற்கு மிகவும் பிடிக்கும். பணக்காரர்கள் என்ற மிடுக்கு அந்த குடும்பத்தில் யாருக்குமே இருந்தது இல்லை. தேஜுவும் அப்படி பழகியது இல்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.