(Reading time: 21 - 41 minutes)

வன் பாடல் முடிந்து அவனுக்கு வாழ்த்துக்கள் சொல்ல காத்திருந்தாள் அனு. ஆனால் தேஜுவின் திருவிளையாடல் தொடங்கியது அடுத்து அவள் அழைத்தது அனுவை தான். இந்த முறை அவள் செய்ய வேண்டியவற்றையும் தேஜுவே கூறினாள். அனுவை ஆட சொன்னாள்.

அவள் தேஜுவை தெய்வத்தை கை கூப்பி வணங்குவது போல் தலைக்கு மேல் கைக்கூப்ப தேஜுவோ முடியாது என்பது போல் தலை அசைத்தாள். அனு செல்லாமல் அமர்ந்து இருக்க இப்போது தேஜு அனுவின் தாயிடம் முறையிட்டாள், அவரும் செல்லுமாறு சொல்ல அவளும் வேறுவழியின்றி மேடைக்கு சென்றாள் ஆனால் தேஜுவையும் ஆட அழைத்தாள் அனு, எப்படியும் தேஜு மறுப்பாள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடலாம் என்று அனு தயாராக நிற்க, மாறாக தேஜுவும் ஒப்புக்கொண்டாள்.

வேறு வழியின்றி இருவரும் சேர்ந்து பள்ளியில் முன்பே ஆண்டுவிழாவிற்கு ஆடிய ஹிந்தி பட பாடலுக்கு ஆடினர்.

மேடையில் அமைக்கப்பட்ட விளக்குகள் அவர்களது ஆடையில் பட்டு மிளிர்ந்தது, இருவருமே ஒன்று போல் அழகாக ஆடினர், இருவருமே ஆண்டு விழாக்களில் பலமுறை ஆடி இருந்தமையால் ஆடல் அவர்களுக்கு புதிதாக தெரியவில்லை, பாடலுக்கு உயிர் தருவது போல் பாடிக்கொண்டும் முகபாவங்கள் தந்தும் அவர்கள் ஆட அனைவருமே இருவரின் ஆட்டத்தை ரசித்தனர். அதில் அனன்யா ஆடுவதையே கண்ணெடுக்காமல் பார்த்தான் அஸ்வத். ஆடல் முடிந்தவுடன் பெரிய கைதட்டலையும் பெற்றனர்.

சிறிது நேரத்தில் அனு தன் இருப்பிடத்திற்கு வந்தமர்தாள், தேஜு அனுவிடம் சொல்லிக்கொண்டு மற்றொரு தோழியோடு தன் அறைக்கு சென்றிருக்க, அனுவின் கண்கள் அஸ்வத்தை தேடியது.

“என்னை தானே தேடிட்டு இருக்க” என்று கேட்டவாறு அருகில் வந்து அமர்ந்தான் அஸ்வத்.

போச்சு மாட்டிகிட்டோம் சரி சமாளிப்போம் “இல்லையே நான் தேஜுவை தேடினேன்” என்று வாய்க்கு வந்ததை வைத்து சமாளித்தாள்

“இல்லையே இப்பதான் உன்கிட்ட சொல்லிட்டு அவள் செல்வதை பார்த்தேனே” என்று அவள் எதிர் பார்க்காததை சொல்லி திணற வைத்தான்.

அவளுக்கு மாட்டிகிட்டோமா என்று தோன்ற சிரிப்பு வந்தது பேச்சை மாற்றுவதற்காக “நீ ரொம்ப நல்லா பாடின மெய்மறந்து போயிட்டேன். அவ்வளவு இனிமையா இருந்துச்சு கேட்க” என்று அவள் மனதில் இருப்பதை கூறினாள்.

“அழகாய் பேச்ச மாத்துற, எனிவே தேங்க்ஸ், நீயும் ரொம்ப அழகா ஆடின ரொம்ப gracefulla இருந்துச்சு” என்று அஸ்வத் கூறினான். பேச்சை மாற்றியதில் தப்பித்தோம் என்று தோன்றியது அனுவிற்கு.

“சரி இப்ப சொல்லு என்னை சைட் அடுத்ததானே நீ” என்று அவன் சுற்றிவளைக்காமல் நேராக  கேட்டான். 

“என்னது நானா கனவு கண்டியா? எனக்குனு ஒரு டேஸ்ட்டு இருக்குப்பா அதை கேவலப் படுத்தாத” என்று மாட்டிக்கொள்ளாமல் இருபதற்காக அவனை மட்டம் தட்டினாள்.

“யாரு உனக்கா?” என்று கேட்டு அவன் சிரிக்க, அவனது சிரிப்பு அனுவின் தன்மானத்தை தட்டியது “என்ன சிரிப்பு ஏன் நீ கண்ணாடி பார்த்ததே இல்லையா? உன்னை போய் யாராவது சைட் அடிப்பாங்களா” என்று நக்கலாக பதில் கூறினாள்.

“ஏன் எனக்கு என்ன குறைச்சல் இந்த டயலாக்கை நான் பாடும் போது கண்ணெடுக்காமல் என்னையே பாத்துட்டு இருந்தவங்க சொல்ல கூடாது” என்று அவன் பேச்சும் நக்கலாகவே வந்தது. பாவம் அனுவிற்கு தெரியாது அவள் ஆடும் பொழுது அவனும் அவளை தான் கண்ணெடுக்காமல் பார்த்தான் என்று...

அவனது பேச்சு அனுவை இன்னும் உசுப்பேத்த “ஆமா இவன் பெரிய மன்மதன்னு நினைப்பு எல்லாரும் உன்னையே பார்த்துக்கிட்டு இருக்க? தென்னை மரத்துக்கு டிரெஸ் மாட்டின மாதிரி இருக்க என் டேஸ்ட்டுல தென்னை மரத்தை எல்லாம் சேர்க்குறது இல்லை” என்று பதிலுக்கு பொரிந்து தள்ளினாள். 

இப்போது அஸ்வத்தின் தன்மானம் இடிக்க “நீ ரொம்ப அழகுன்னு நினைப்பா உனக்கு? தொடப்பக்குச்சிக்கு டிரெஸ் போட்ட மாதிரிதான் நீ இருக்க, எனக்கு உன்னை விட நல்ல டேஸ்ட்டு இருக்கு, அதுல தொடப்பகுச்சி எல்லாம் செட் ஆகாது” என்று அவளை மட்டம் தட்ட கூறினான்.

“ச்சே உன்கூடை எல்லாம் பேசினே பத்தியா என்னை சொல்லனும் எனக்கு உன்னை பார்க்கவே பிடிக்கலை ஹ்ம்ம்” என்று கோவமாக கூறிவிட்டு எழுந்து செல்ல போனாள்.

“எனக்கு மட்டும் ஆசையா?! உன்னைலாம் யாரு தேடி வந்து பாப்பாங்க ஹ்ம்ம்” என்று அவனும் கோவமாக பதில் அளித்தான்.

அவன் பேச்சிற்கு பதில் அளிப்பதற்காக மீண்டும் அமர்ந்து பேசினாள் “அப்போ யாரு சயின்ஸ் எக்ஸ்ஹிபிஷன்ல தேடி வந்து பார்த்தது?” என்று அவனை வாரியதாக எண்ணி கேட்டாள்.

“ஓ! உனக்கு அப்படி வேற ஒரு நினைப்பு இருக்கா?! ஹலோ யாரு உன்னை பார்க்க வந்தது நீ என்னை பார்க்கனும்னு சொன்னதாக ஃபாத்திமா சொன்னாள் அதான் வந்து பார்த்தேன் இல்லைனா உன்னை பார்க்கனும்னு எனக்கு என்ன தலையெழுத்தா” என்று ஆவேசமாக பேசினான்.

ஃபாத்திமா எதார்த்தமாக இருவரையும் பேச வைப்பதற்காக சொன்னது சண்டையில் அனுவின் மானத்தை வாங்கியது, அது அறியாமல் அவள் மீது அனுவிற்கு கோவமாக வந்தது.

“போதும் பேசாத உன்கூட பேசவே எனக்கு பிடிக்கலை, இனிமே எப்பயுமே எங்க பார்த்தாலும் உன்கிட்ட பேச மாட்டேன் போதுமா” என்று கோவமா பேசிவிட்டு அவ்விடத்தை விட்டு தன் தாயிடம் சென்று கிளம்பும்படி கூறினாள். அவரும் நேரம் சென்றது அறியாமல் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று எண்ணி அனைவரிடமும் விடைபெற்று கிளம்பினார். கோவம் அஸ்வதிடம் மட்டுமே அவனது அன்னையிடம் இல்லை என்று தோன்ற அவரிடம் மட்டும் சொல்லிக்கொண்டு கிளம்பினாள் அனு.

அஸ்வத்தின் மனம் பல எண்ணங்களில் அரற்றியது, எப்படி எல்லாம் பேசுகிறாள் அவ்வளவும் திமிர்...இன்னும் நல்லா திட்டிருக்கணும், எல்லாம் கொஞ்சம் நல்லா இருக்கிறோம் என்ற நினைப்பு ஹ்ம்ம், இருந்தாலும் நம்ம அப்படி பேசிருக்க கூடாதோ?! அதுவும் தப்புதானே, அவளை பிடித்துபோன மனம் ஒருபுறம் அவளுக்காக முரண்டு பிடிக்க அவளை வெறுத்த மனம் அவளை திட்டியது... அனன்யாவும் இதே போல்தான் குழம்பி போனாள்.. இத்தகைய முடிவை இருவருமே எதிர் பார்க்கவில்லை..பல நாட்களுக்கு பின் ஏற்பட்ட இனிமையான உணர்வு இப்போது வடிந்து போனது. ஏன் பல வருடங்கள் கடந்து பார்த்துக்கொண்டோம் ஏன் மீண்டும் சண்டை போட்டோம் என்றே புரியவில்லை இருவருக்கும்.      

செப்பா... இந்த சின்ன பசங்க சண்ட எப்பதாங்க முடியும்? நெக்ஸ்ட் எபிசொட்ல பாப்போம்....

Go to Kadhal payanam # 02

Go to Kadhal payanam # 04

பயணம் தொடரும்...


{kunena_discuss:676}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.