(Reading time: 21 - 41 minutes)

வள் கொடுக்கும் பில்ட் அப் வைத்தே அவள் நக்கலாக தான் ஏதோ கூற போகிறாள் என்று புரிந்து போயிற்று அஸ்வதிற்கு, அவளை கண்ணெடுக்காமல் சில நொடிகள் பார்த்தவன் “ நீ எப்பவுமே இப்படிதான் இருப்பியா?” என்று சந்தேகமாக கேட்க

“ஏன் எப்படி இருக்கேன்?” என்று தன்னையே ஒரு முறை பார்த்துக்கொண்டாள், அவள் செய்கையில் சிரிப்புவர இப்படி அழகா சிருச்சுக்கிட்டே தான் என்று மனம் கூறினாலும் வெளியே சொல்லாமல் “இப்படி காமெடி பீஸ் மாதிரி தான்” என்று அவன் சிரித்துக்கொண்டே கூறினான்.

அவனது கூற்றிற்கு பதில் கூறாமல் முறைத்தாள். “தெரியாமல் சொல்லிட்டேன் தாயே, இப்போ என்னை திட்ட ஆரம்பிக்காத வா போகலாம்” என்று மென்மையாக கூறி சமாதான படுத்தி கூட்டி சென்றான்.

கோவம் குறைந்தவளாக மீண்டும் இருவரும் நடக்க தொடங்கினர், சிறிது தூரம் சென்றபின் ஏதோ நியாபகம் வந்தவள் போல் “ஆமா அஸ்வத் நீ எதற்கு என்கூட சின்ன வயசுல சண்டை போட்ட? என்று பலநாள் புரியாத கேள்விக்கு விடை கிடைக்கபோகும் ஆர்வத்தில் அவள் அஸ்வதிடம் கேட்டாள்.

“அதுவா...” என்று சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் “என்கூடதானே இருக்க போகிற அப்பறமா சொல்லுறேன்” என்று அவன் தன் எண்ணபோக்கில் கூற புரியாமல் அவனை ஏறிட்டு பார்த்தாள். “இல்லை இந்த ஃபங்க்ஷன்ல தானே இருக்க போறோம் அதை சொன்னேன்” என்று மழுப்பினான். அவள் மறுபேச்சு இன்றி வரவும் தப்பித்தோம் என்று இருந்தது அவனுக்கு. இருவரும் சென்று கொண்டிருக்க அவனது தோழன் நிரஞ்ஜன் அழைக்கவும் அனுவிடம் சொல்லிக்கொண்டு நிரஞ்ஜனிடம் சென்றுவிட்டான்.

தோட்டத்தில் அமர்ந்து இருந்த பெண்மணியிடம் சென்று “சாரி ஆன்ட்டி கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” என்று கூறி அவருக்கு தண்ணீர் தந்து பேண்ட்எய்டும் போட்டபின்பு “இப்ப பரவாலையா ஆன்ட்டி?” என்று கேட்டாள்.

“ரொம்ப தேங்க்ஸ்மா” என்று அந்த பெண்மணி நன்றியுடன் கூறிக்கொண்டு இருக்க “என்னம்மா ஆச்சு” என்று பதரியவாறு அஸ்வத் அந்த பெண்மணியின் அருகில் வந்தான்.

என்னது அம்மாவா? திரும்பி திரும்பி இவன் கண்ணுலயே வந்து மாட்டுரோமே என்று எண்ணிக்கொண்டு இருந்த நேரத்தில் அஸ்வதிற்கு அவன் தாய் கதையை விளக்கி முடித்து இருந்தார். அவன் அவனது பங்கிற்கு நன்றி உரைத்தபின் நிகழ் காலத்திற்கு வந்தாள். “இவன்தான்மா என்னோட பையன் பேரு...” என்று ஆரம்பிக்க திரும்பியுமா என்று இருவருக்கும் தோன்றிவிட “அம்ம்மா... எனக்கு அனன்யாவை முன்னாடியே தெரியும் நான்தான் சொல்லிருக்கேன்ல அனு சின்ன வயசு சண்ட” என்று தன் தாயிடம் கூற அவரும் நினைவிற்கு வந்தது போல் “நீ தானாம்மா” என்று அவர் அனுவின் பக்கம் திரும்பினார்.

ஓ அம்மா பையனா நீ... என்று மனதில் நினைத்துக்கொண்டு வெறும் புன்முறுவல் மட்டும் பூத்தாள்.

“உன்னோட அம்மா அப்பா என்னம்மா பண்றாங்க? கூட பிறந்தவங்க எத்தனை பேரு?” என்று பரிவாக கேட்டார்.

“அம்மா டீச்சர், அப்பா பாங்க்ல அக்கௌன்ட் மேனேஜரா இருக்காங்க, அண்ணா மட்டும் தான் சென்னைல எம்.என்.எம் காலேஜ்ல பி.இ ஃபைனல் இயர் படிக்கிறாங்க ஆன்ட்டி.”

“ஓ அப்படியாமா என் பொண்ணு அஹல்யா இங்கதான் எஸ்.ர் கல்லூரில பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள், இவங்க அப்பா இங்க தான் கண்ணன் டெக்ஸ்டைல் ஷாப் வச்சுருகாங்க, என்னோட ஹஸ்பெண்ட் பேரு தான்... நானும் அவரும் சேர்ந்துதான் பார்த்துக்கிறோம். என் பேரு துளசி என் பேருக்கு என்னம்மா குறைச்சல்? என்னோட பேரை வைக்க சொன்னால் அப்பாவும் பையனும் சேர்ந்து கிண்டல் பண்ணிட்டு வைக்கலை ஹ்ம்ம்,” என்று வெகுளித்தனமாக கூறிக்கொண்டு இருந்தார்.

இதல்லாம் எதற்கு இவங்க நம்மிடம் சொல்றாங்க என்று தோன்றினாலும் அவர் கூறிய விதத்தில் சிரிப்பு வர மெளனமாக கேட்டுக்கொண்டிருந்தாள் அனு. அவளது முகத்தை பார்த்தே உணர்தவன் “அம்மா போதும் விட்டா அனு அழுதுடுவாள் போல விட்டுடுங்க” என்று தன் தாயிடம் இருந்து காப்பாற்றினான்.  

“சே சும்மா இருடா கிண்டல் பண்ணாத பார்த்தால் ரொம்ப அமைதியான பொண்ணு மாதிரி இருக்கு” என்று துளசி கூற அனுவிற்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது ஆனால் வெளியே காட்டிக்கொள்ளாமல் தேஜு இந்த மாதிரி தெய்வ வாகெல்லாம் வந்து கேளு நான் அமைதியான பெண்ணாம் அப்படியே தேன் வந்து பாயுது காதுல என்று மனதில் எண்ணிக்கொண்டாள்.

“யாரு அனுவா?! அமைதியா?” என்று நன்கு அறிந்தவன் போல் அஸ்வத் கூற, மகனே உன் அம்மா இருக்கதால தப்பிச்ச என்று எண்ணிக்கொண்டு வெறும் முறைப்புடன் நிறுத்திக்கொண்டாள்.

அனு என்று அழைத்தவாறு ஹேமா வந்தார், துளசியிடம் சொல்லிக்கொண்டு தாயிடம் சென்றாள் “என்னம்மா இப்பதா வரிங்க?”

“கொஞ்சம் லேட் ஆகிடுச்சுடி ஆட்டோ வேற கிடைக்கலை” என்று அவர் பாவம்போல் கூறினார்

“மூணு தெருவிற்கு ஆட்டோவாமா ரொம்ப ஓவர்” என்று சொல்லிக்கொண்டு இருந்தவள், தன் தாயை அழைத்து சென்று துளசியிடம் அறிமுகம் செய்து வைத்துக்கொண்டிருந்தாள், அதே நேரம் தேஜுவின் தாய் லதாவும் அங்கு வர மூவரும் அருகருகில் அமர்ந்து பேச துவங்கினர். என்ன செய்வது என்று புரியாமல் அம்மூவருக்கும் அஸ்வதிற்கும் இடையில் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தாள். அனு தன் அருகில் அமர்வதை பார்த்து அஸ்வத் பேசுவதற்காக எத்தனிக்க, மேடையில் பேச்சுக்குரல் கேட்டு அனைவரும் திரும்பி பார்த்தனர் அங்கு தேஜுவின் தந்தை ரவி நின்றுக்கொண்டிருந்தார்,

“ஹாய் ஃப்ரண்ட்ஸ், என்னோட அழைப்பை மதித்து உங்க வேலைகளுக்கு நடுவிலும் இந்த விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் ரொம்ப நன்றி, உங்களோட வாழ்த்துக்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். இங்க இருக்க கூட்டத்தில என் ஃப்ரண்ட்ஸ் கூட்டத்தை விட என் பெண்ணோட ஃப்ரண்ட்ஸ்தான் அதிகமா இருப்பிங்க போல சோ அந்த எங் குரூப்புக்கு தனி தேங்க்ஸ்...” என்று அவர் கூறவும் பெரிய கைதட்டல் எழும்பியது. “நன்றி நன்றி.. எல்லாரும் கண்டிப்பா இருந்து சாப்பிட்டுட்டு போங்க” என்று அவர் பேசி முடிக்க அவரது கையில் இருந்து மைக் தேஜுவின் கைக்கு மாறியது.

“ஹாய்.... எல்லாரும் நல்லா கதை பேசிட்டு இருக்கிங்க போல! ஒரு சேஞ்சு வேணாமா? இங்க என் ஃப்ரண்ட்ஸ் கூட்டம் கொஞ்சம் அதிகமா இருக்கிறதால அவங்களுக்கு ஒரு கேம் வைக்க போறேன், ஒன்னும் இல்லைங்க நான் யாரையாவது ரண்டமா(random) கூப்பிடுவேன் அவங்க வந்து பாடலாம், ஆடலாம், மேமிக் கூட பண்ணலாம்” என்று அவள் அறிவிப்பு தர கூட்டதில் உற்சாக கூச்சல் அதிகமானது, அதிலும் சிலர் பின் வாங்கினர் ஆனால் தேஜு விடுவாளா?! ஆட்டம் தொடங்கியது....

கலகலப்பாக சில ஆட்டங்களும் சில பாடல்களும் சென்றது. சிலர் தங்களை மறந்து பாடினர் சிலரோ பாடலை டெடிகேட்(dedicate) கூட செய்தனர். ஆடலும் பாடலும் சிறப்பாக நடந்தேறியது. பின் தேஜு அஸ்வத்தை அழைத்தாள் அவன் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை தன் தாயின் புறம் திரும்பினான். அவர் செல்ல அனுமதிக்கவும் மேடைக்கு சென்றான். “நான் எனக்கு பிடித்த பாடல் ஒன்னு பாடுறேன் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகொங்க” என்று புன்முறுவலுடன் கூறி பாடத் தொடங்கினான்.

“துளித்துளி துளி மழையாய் வந்தாலே....

சுடச்சுட சுட மறைந்தே போனாலே...

பார்த்தால் பார்க்க தோன்றும் பேரை கேட்க தோன்றும்

பூப்போல் சிரிக்கும் போது... காற்றை பறந்திட தோன்றும்...

செல் செல் அவளிடம் செல் என்றே கால்கள் சொல்லுதடா...

சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்ஜம் கொல்லுதடா...

அழகாய் மனதை பறித்து விட்டாளே...”

பாடலை ரசித்து கண்கள் மூடி பாட துவங்கினான். அவனது பாடலும் அவனது குரலும் அனன்யாவை கவர்ந்தது. அவனையே கண்ணெடுக்காமல் மெய்மறந்து பார்த்துக்கொண்டு இருந்தாள்... இவ்வாறு மயங்கியதர்க்கு வருத்த படபோவதை உணராமல் ரசித்துக்கொண்டு இருந்தாள். இரவின் குளிர்காற்று அழகிய மெல்லிசை அதை மேலும் அழகூட்டும் அவனது குரல் அனைவருமே மயங்கி போனனர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.