(Reading time: 7 - 14 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

   

நேரம் மெல்ல நகர்ந்தது...

   

திடீரென தூக்கத்தில் இருந்து கண் விழித்தாள் ரேஷ்மி.

   

அறையில் இருள் சூழ்ந்திருந்தது. நேரம் என்ன என்று தெரியா விட்டாலும். ஷ்யாமின் அருகாமை மனதிற்கு இதமாக இருக்கவே, அப்படியே அசையாமல் சில நிமிடங்கள் படுத்திருந்தாள்...

   

தண்ணீர் தாகம் எடுப்பதாக தோன்றவும், எழுந்து அமர்ந்து, பக்கத்தில் இருந்த மேஜை மீதிருந்த தண்ணீர் குவளையை ஷ்யாமின் தூக்கத்தை கெடுக்காமல், ஆனால் அவனின் கைகளை விலக்காமலும் மெல்ல எம்பி எடுத்தாள்.

   

தண்ணீர் குடித்து விட்டு, குவளையை மீண்டும் வைத்த போது, அங்கே இருந்த டைரி அவளின் கண்ணில் பட்டது.

   

காலையில் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவளையும் அறியாமலே அந்த டைரியை கையில் எடுத்து வந்திருந்தாள்...

   

என்ன என்ற ஆர்வம் தோன்ற, எட்டி அந்த டைரியை கையில் எடுத்தாள். ஷ்யாமின் கையை மெதுவாக விலக்கி விட்டு, மெல்ல எழுந்து அமர்ந்து, மேஜை விளக்கை போட்டு விட்டு, பக்கங்களை புரட்டிப் பார்த்தாள்...

   

பல பக்கங்களில் சுமி என்ற பெயர் கண்ணில் படவும் ரேஷ்மியின் ஆர்வம் இன்னும் அதிகமானது.

   

ஆனால் மற்றவரின் டைரியை படிப்பது நாகரிகமல்ல என்பது உரைக்கவும், படிக்கலாமா, வேண்டாமா என்ற தயக்கத்துடன் மீண்டும் புரட்டினாள்...

   

சுமியின் ஜாடையில் ரோஜாப்பூ குவியலாக பிங்கும், சிவப்புமாக இருந்த அந்த பச்சிளங் 

2 comments

  • Oh my God sis 🥹🥹🥹 don't know something I feel very heavy in heart when I read this, please update next episode ASAP, love your writing a lot especially this story 💗💗💗 thanks for the wonderful creation 🙏🏻🙏🏻🙏🏻

    • Aww, that means so much to me! 💗 I'm so happy to hear that this story touched your heart. Your support and love truly motivate me! I'll work on the next episode ASAP. Thank you for your kind words! 💕✨

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.