அவள் கையிலிருக்கும் பேப்பர்களை மறந்து விட்டாள் போலும்...
“உங்க கையில இருக்க பேப்பரை, கேட்கிறேன்....” என்று நான் சொல்ல, அசடு வழிந்த படி கையிலிருந்த பேப்பர்களை என்னிடம் கொடுத்தாள்.
ரேஷ்மியின் முகத்தில் அவளையும் மீறி சின்ன புன்னகை தோன்றி இருந்தது.
ஆரம்பத்தில் இருந்த தயக்கம் காணாமல் போய் விட, தொடர்ந்து படிக்க தொடங்கினாள்.
அதன் பின் நடந்தவற்றை கமல் மிகவும் ரசித்து எழுதி இருப்பதாக ரேஷ்மிக்கு தோன்றியது...
ஹேமாவின் மூலம் சுமித்ராவை பற்றி தெரிந்துக் கொண்டது, அவர்களின் திருமண பேச்சு தொடங்க ஹேமா உதவியது, சுமித்ராவிடம் தன் குடும்பத்தை பற்றி சொன்னது, திருமணம், ரேஷ்மி பிறந்தது என ஒவ்வொன்றாக படிக்க, படிக்க முதல் முறையாக கமலுக்கு இருந்த இன்னொரு முகம்... அந்த மென்மையான முகம் ரேஷ்மிக்கு தெரிய தொடங்கியது...
அதே போல கமல் சுமித்ரா நடுவே இருந்த ஆழ்ந்த அன்பும் அவளுக்கு புரிந்தது...
ஒவ்வொரு பக்கத்திலும் சுமி, சுமித்ரா என்ற பெயர் வந்த இடங்களில் திரும்ப திரும்ப பேனாவினால் எழுதப் பட்டதன் அடையாளமாக அந்த பெயர்கள் பட்டும் அடர்த்தியாக, தனியாக தெரிந்தது.
அம்மா மீது அப்பாவிற்கு இந்த அளவிற்கு அன்பு இருந்ததா என்ற ஆச்சர்யத்துடன் மேலே படித்தாள் ரேஷ்மி...
சுமித்ராவிற்கு கான்சர் என்று தெரிந்த போது நடந்தவற்றை கமல் எழுதி இருந்த இடத்தில் ரேஷ்மிக்கு கண்ணில் கண்ணீர் தோன்றியது...
அந்த பக்கங்களில் ஆங்காங்கே இங்க் கரைந்து காணப் பட்டது கமலின் கண்ணீர் பட்டு
Oh my God sis 🥹🥹🥹 don't know something I feel very heavy in heart when I read this, please update next episode ASAP, love your writing a lot especially this story 💗💗💗 thanks for the wonderful creation 🙏🏻🙏🏻🙏🏻
Aww, that means so much to me! 💗 I'm so happy to hear that this story touched your heart. Your support and love truly motivate me! I'll work on the next episode ASAP. Thank you for your kind words! 💕✨