Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 52 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
இங்கு கான்ஸ்டபிளோ
”தில்லையோட விசுவாசி நானு நான் ஏன் அவனைப் பத்தி தெரிஞ்சிக்கப் போகனும், வேற வேலையில்லை எனக்கு, முதல்ல சிதம்பரம் மனசுல இருக்கற விசயத்தை சாருக்கு சொல்லனும், அதுக்கு முன்னாடி இந்த சிதம்பரம் யார்ங்கற தகவலை கண்டுபிடிக்கனும், அதை முதல்ல செய்யலாம் சிதம்பரம் வந்து கேட்டா அப்படியொரு அடுக்குமாடி குடியிருப்பே இல்லைன்னு சொல்லிடலாம், அந்தப் பொண்ணு பொய் சொல்லுதுன்னு நம்ப வைக்க முயற்சி செய்யலாம், அந்தாளே தில்லையை தேடிக்கட்டும், நாம அந்தாளை பத்தி தேடுவோம்” என நினைத்துக் கொண்டு சிதம்பரத்தை பற்றி தெரிந்துக் கொள்ள இறங்கினார்.
கமிஷனர் ஆபிசிலோ சிதம்பரம் சொன்ன விசயத்தைக் கேட்டு கமிஷனர் கலங்கிவிட்டார்
”யோவ் என்னய்யா சொல்ற, தில்லை இறந்துட்டான்னு உலகமே நம்புது, நீ பாட்டுக்கு யாரோ சொன்ன கட்டுக்கதையை இங்க வந்து சொல்லி தில்லை உயிரோட இருக்கான்னு நம்ப சொல்ற, அறிவிருக்கா உனக்கு”
”சார் சம்யுக்தாவை நான் நம்பறேன், அவங்க பொய் சொல்லலை, உண்மையாவே தில்லைக்கும் சம்யுக்தாவுக்கும் கல்யாணம் ஆகியிருக்கலாமே, இத்தனை நாளும் அவங்களும் அவன்கூட இருந்திருக்காங்களே, அதனால சொல்றேன் தில்லை கேஸை மறுபடியும் ஓபன் பண்ணலாம் சார்“
”ப்ச் என்னய்யா நீ, இப்ப போய் தில்லை கேஸை ஓபன் பண்ண சொல்ற, கஷ்டபட்டு அவனை ஒழிச்சோம், அதனால நமக்கு நல்ல பேர் கிடைச்சது, இப்பவே தில்லை போனதுக்கப்புறம் அவன் இடத்தில யார் இருக்கறதுன்னு உள்ளுர் ரௌடிங்க அடிதடியில இறங்கியிருக்காங்க”
”அவங்களை விட்டுத்தள்ளுங்க சார், ஒருத்தனுக்கு ஒருத்தன் சண்டை போட்டு சாகட்டும், அவங்க என்ன நல்லவங்களா, நாம போய் அவங்களுக்கு நல்லது செய்றதுக்கு, கெட்டவங்கதானே எப்படியும் என்கவுன்டர்ல சாகப் போறவங்க ஆனா, இப்ப அவனுங்களே சாகறதுக்கு முடிவெடுத்து அடிதடியில இருக்காங்க, போகட்டுமே எவனாவது கடைசியில வந்து நிப்பான், அவனை நாம என்கவுன்டர்ல முடிச்சிட்டா இந்த ஊர் அமைதியாயிடும் சார்”