”ஆமாம் சார், கமிஷனர் கூட கேஸ் ஓபன் பண்ண வேணாம்னு சொல்லிட்டதால சிதம்பரம் கோபத்தில இருக்காரு, ஆமாமாம், அவருக்கா, இருக்காங்க சார், அப்பா, அம்மா ஆனா, அவங்க வேற ஊர்ல இருக்காங்க, இவருக்கு இன்னும் கல்யாணம் ஆகலை, அதுக்குத்தான் சம்யுக்தாவை பார்க்கறாரு, எப்படியாவது தில்லையை கொன்னு சம்யுக்தாவை கல்யாணம் பண்ணிக்கனும்னு குறிக்கோளோட இருக்காரு சார், ஆமாம் ஆமாம் சரிங்க சார், சரிங்க சார்” என பவ்யமாக பேசிவிட்டு போனை வைத்த கான்ஸ்டபிள் ஒன்றும் அறியாத பிள்ளை போல சிதம்பரம் முன் சென்று நின்றார்
”சார் அடுக்குமாடி குடியிருப்புங்கள்ல விசாரிச்சேன், எவனுமே சரியான தகவல் தரலை, தெளிவா இருக்கானுங்க, தில்லையை பத்தி கேட்டா அவன்தான் செத்துட்டானே அப்புறம் ஏன் கேட்கறேன்னு நக்கல் பண்றாங்க, சரி சம்யுக்தாவை பத்தி கேட்டா யாரு அது ரொம்ப அழகா இருப்பாளான்னு என்கிட்டயே பேரம் பேசறாங்க சார், தலையே வலிக்குது தாங்க முடியலை சார்” என பொய்யாக காரணங்களை சொல்லி புலம்ப அதை நம்பிய சிதம்பரமும்
”புலம்பாதய்யா விசாரிக்க வேண்டிய விதத்தில விசாரிச்சா உண்மை தெரியும், தில்லையோட அடியாட்கள் செத்தா என்ன, அவங்க குடும்பங்கள் எங்கயாவது இருப்பாங்க, அவங்களைப் பிடிச்சா உண்மை தெரிஞ்சிடும், பழைய ரிக்கார்ட்ஸ் எல்லாம் எடுங்க தில்லையோட அடியாளுங்க, அவங்களோட குடும்பத்தை பத்தி தேடுங்க, அவங்களை விசாரிச்சா ஏதாவது தகவல் கிடைக்கும்”
”சரிங்க சார் ஆனா, நம்மகிட்ட தில்லையை பத்தின தகவல்களே இல்லையே, இதுல எங்க இருந்து அவனோட அடியாளுங்களை பத்தின தகவல்கள் இருக்கப் போகுது”
”இருக்கும் ஏதாவது இருக்கும் கண்டுபிடிக்கலாம், நீங்க எல்லா கிரிமினல்ஸ் ஃபைல்ஸ்யும் கொண்டு வாங்க, நானும் பார்க்கிறேன்”
”சரிங்க சார் இதோ கொண்டு வரேன்” என சொல்லிவிட்டு சென்றவர் சிறிது நேரம் கழித்து கை நிறைய ஃபைல்ஸ்களுடன் வந்து சேர்ந்தார்.
அவரிடம் இருந்த ஃபைல்ஸ்களை வாங்கி ஆர்வமாக பார்த்தான் சிதம்பரம். கான்ஸ்டபிளும்