(Reading time: 9 - 18 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

   

”நீ சொல்றதும் சரிதான், அப்ப முதல்ல இந்த ஊரை அமைதியாக்கற வழியைப் பாரேன்”

   

”இல்லை சார் முதல்ல தில்லையை கண்டுபிடிக்கனும் சார்”

   

”இதப்பாரு என்னால இந்த கேஸ் விசயமா உனக்கு உதவ முடியாது, கேஸை ரீஓபன் பண்ணா விசயம் வெளிய தெரிஞ்சிடும், மீடியாவும் கேள்வி கேட்பாங்க, மக்களுக்கும் மறுபடியும் பயம் வரும்”

   

”சார் யாருக்கும் தெரியாம ரகசியமா இந்த விசயத்தை முடிக்கறேனே ப்ளீஸ் சார், எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க, தில்லை இருக்கானா இல்லையா அவ்ளோதான் பிரச்சனையே, அதுக்கான உண்மையை கண்டுபிடிச்சிட்டா பிரச்சனை முடிஞ்சிடும் சார்“

   

”ப்ச் இந்த தில்லையிருக்கானே அவன் உயிரோட இருந்தப்பவும் டார்ச்சர் பண்ணான், செத்தப் பின்னாடியும் டார்ச்சர் பண்றான், இதப்பாரு சிதம்பரம் என்னால லீகலா இந்த விசயத்துக்கு உதவ முடியாது, வெறும் வதந்திகளை வைச்சி கண்மூடித்தமான விசங்களை எதையும் என்னால நம்ப முடியாது, இப்போதைக்கு இந்த கேஸ் ஓபன் பண்ண வேணாம் ஆனா, பர்சனலா நீங்க தில்லையை தேடுங்க, ரகசியமா வைச்சிக்குங்க, யாரையும் நம்ப வேணாம், அவனை தேடி கண்டுபிடிங்க, என்கிட்ட சொல்லுங்க அப்புறம் கேஸ் ரீஓபன் பண்ணிடறேன், இப்போதைக்கு செத்தவன் செத்தவனாகவே இருக்கட்டும், நான் சொல்றது உனக்குப் புரியுதுல்ல”

   

”புரியுது சார் இந்த கேஸ் விசயமா நான் ஆதாரங்களை தேடிப் பிடிக்கிறேன், வலுவான ஆதாரம் கிடைச்சதும் உங்ககிட்ட வரேன் சார், நீங்க இந்த கேஸை மறுபடியும் ஓபன் பண்ண அனுமதி தரனும் சார்“

   

”கண்டிப்பா தரேன் இப்ப நீங்க போகலாம்“

   

”தாங்க்யூ சார் நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு சிதம்பரம் சென்றதும் கமிஷனர் அவசரமாக தனது செல்போனில் யாரையோ தொடர்புக் கொண்டார்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.