”ஹலோ யார் பேசறது”
”சொல்லுங்க கமிஷனர் சார், என்னாச்சி நான் சொன்னபடியே செஞ்சிட்டீங்களா”
”இதப்பாருப்பா, மறுபடியும் தில்லையை பத்தின விசயம் வெளிய வருது, அவன் செத்துட்டான்னு உலகத்தை நம்ப வைக்க நான் படாதபாடு பட்டுட்டேன், இப்ப சிதம்பரம் வந்து நிக்கறான், கேஸ் ரீஓபன் பண்ண சொன்னான் நீ சொன்ன மாதிரியே நானும் முடியாதுன்னு சொல்லிட்டேன், ஆனாலும் அவன் இதை விடமாட்டான் போல இருக்கு, எவ்ளவோ சொல்லி புரிய வைச்சும் புரிஞ்சிக்காம இருக்கான், அதனால ரகசியமா வேணா தில்லையை தேடுன்னு சொல்லி அனுப்பிட்டேன், என்னால இவ்ளோதான் செய்ய முடிஞ்சது, வீணா என் மேல நீ கோபப்படாத சரியா, நான் இந்த விசயத்தில குறுக்க வரலை, நீயாச்சி சிதம்பரமாச்சி,
அவனை தடுக்க நான் முயற்சி செஞ்சி பார்த்தேன், முடியலை மேற்கொண்டு என்ன செய்யனுமோ நீயே செய், இதுக்குள்ள நான் வந்தா தேவையில்லாம நான் செஞ்ச தப்புக்கள் வெளிய வரும், தில்லை விசயத்தில பல முக்கியமான புள்ளிகளுக்கு சம்பந்தம் இருக்கு, இந்த சிதம்பரம் தில்லையோட மரணத்தை விசாரிக்க ஆரம்பிச்சா நமக்குத்தான் ஆபத்து, இப்பதான் அவன் ட்யூட்டிக்கே வந்தான், இந்தச் சமயம் அவனை வேற ஊருக்கு கூட என்னால மாத்த முடியாது, நீதான் ஏதாவது செய்யனும், இதுவரைக்கும் நீ சொன்ன மாதிரியே நான் செய்துட்டேன், இனி என்னால முடியாதுப்பா என்னை மன்னிச்சிடு இந்த விசயத்தில என் தலை உருள வேணாம்”
”சரி சரி நான் பார்த்துக்கறேன், சிதம்பரத்தை கண்காணிக்க ஆளுங்களை போட்டாச்சி, இனி உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது”
”சந்தோஷம்” என சொல்லி போனை கட் செய்தவர் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.
மறுபக்கம் சிதம்பரத்தை பற்றின தகவல்களை கேட்டறிந்த கான்ஸ்டபிளும் அதை சம்பந்தப்பட்ட ஆளிடம் தொடர்பு கொண்டு சொல்லி வைத்தான்