Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 57 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
”இல்லை அது வந்து” என அவள் திணற அவனோ குழம்பினான்
”உனக்குத்தான் என்னை பிடிக்காதே, அப்புறம் என்ன தயங்கற வா என்கிட்ட” என அழைக்க அவளோ பின்னால் 2 அடி எடுத்து வைத்து
”உன்னை எனக்கு பிடிக்காதுதான், 2வது முறையும் எனக்கு நீ அநியாயம் செஞ்சிட்ட ஆனாலும் இப்ப இந்த தாலி” என இழுக்க அவனோ
”சென்ட்மென்ட்டா யோசிக்காத, அது வெறும் கயிறுதான், அதுக்கு எந்த அர்த்தமும் இல்லை, கோபத்தில கட்டிட்டேன், தப்புதான் வேணும்னா நீ சொன்னியே உன் அப்பாகிட்ட வந்து மன்னிப்பு கேட்கச் சொல்லி நான் வேணா இப்ப உன்கூட வரேன், நேரா சென்னைக்கு போகலாம்”
”சென்னையா ஆனா எங்கப்பா மதுரையிலதானே இருக்காரு”
”இல்லை மதுரையில இருந்து சென்னைக்கு மாறிட்டாராம்”
”ஓ அப்படியா“
”ஆமாம் அவர் நல்லாயிருக்காரு, ஒரு பிரச்சனையும் இல்லை, நானும் உன்கூட வரேன், உன் அப்பாகிட்ட மன்னிப்பு கேட்கறேன், அப்படியே நான் ஏன் அப்படி செஞ்சேன்ங்கறதையும் சொல்றேன், ஒருவேளை அவர் நான் சொல்றதை நம்பலாம் நம்பாமலும் போகலாம் ஆனா, உன்னை அவர் ஏத்துக்குவாரு”
”இப்படியே எப்படி போறது, இந்த தாலியைப் பார்த்தா அப்பா என்ன நினைப்பாரு”
”அதுக்குதான் சொல்றேன், அந்த தாலியை கழட்டிடலாம்னு, எனக்கு அது மேல பெரிசா சென்ட்டிமென்ட்லாம் கிடையாது”
”ஆனா எனக்கு இருக்கு” என்றாள் உறுதியாக அவளின் பேச்சைக் கேட்டு திடுக்கிட்ட தில்லையோ