Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 35 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
பாதி தூக்கத்தில் அசைந்த ஷ்யாம், ரேஷ்மியை கைகளால் தேடினான். அவள் பக்கத்தில் இல்லை என்பது புரிந்து கண் திறந்து பார்த்தவன், ரேஷ்மி கட்டில் ஓரத்தில் சாய்ந்து அமர்ந்திருப்பதை கவனித்து விட்டு, துள்ளி குதித்து எழுந்தான்.
ரேஷ்மியின் கண்கள் கலங்கி இருப்பது கண்ணில் படவும்,
“சில்க், அழாதேடா,” என்று சொல்லிக் கொண்டே அவளை அணைத்துக் கொண்டான்.
அதுவரை அதற்காகவே தடைப் பட்டிருந்ததுப் போல, ரேஷ்மியின் கண்ணீர் சட்டென மடை திறந்த வெள்ளமாக இப்போது கொட்டியது!
கமலின் மறைவை நினைத்து அவள் அழுகிறாள் என நினைத்து மனைவியின் முதுகை கனிவுடன் வருடிய படி அவளை தேற்ற முயன்றான் ஷ்யாம்.
நிறுத்தாமல் தொடர்ந்து சில நிமிடங்கள் அழுத ரேஷ்மியின் அழுகை மெல்ல, மெல்ல குறைந்தது.
“ரேஷ்மி... ரேஷூ...” பூங்கோதையின் குரல் அறைக்கு வெளியே இருந்து கேட்கவும், வேகமாக சென்று கதவை திறந்த ஷ்யாம்,
“அவ இன்னும் அழுதுட்டே இருக்கா பாட்டி,” என்றான் வருத்தத்துடன்.
பூங்கோதையும் இரவெல்லாம் அழத் தான் செய்திருந்தாள். கமல் அவளுடைய மூத்த மகன்... அவள் இங்கே கல்லை போல இருக்க, மகனின் வாழ்க்கை முடிந்து போன துக்கத்தை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
ஆனாலும், அதை எல்லாம் தற்காலிகமாக ஒதுக்கி விட்டு, பேத்தியின் அருகே சென்றாள்.
“ரேஷூ, ரேஷூ... அழக் கூடாது... என் செல்லம்ல நீ...”
Vanakam...
By this story you give new definition for unconditional love.
This is story really amazing...
Thank you