தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 57 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
உதயை ஒரு பார்வை பார்த்து விட்டு, மீண்டும் கண்களை உருட்டிய நந்திதா, “எல்லாம் என் சந்தோஷத்துக்காக செய்தது...! அதை தானே சொல்ல போறீங்க?” என்றாள் கேலியாக!
உதய் சிரித்தான்!
“நீ ஸ்மார்ட்ன்னு எனக்கு தெரியுமே நதி... இன்னைக்கு நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? என் நதி இப்படி என் தோள் சாஞ்சு இருக்க, நான் அவளை கட்டி பிடிச்சுட்டு இருக்க... ட்ரீம் கம் ட்ரூ மொமன்ட் நதி...”
“ம்ம்ம்ம்...”
“நான் உன் கிட்ட இன்னும் ஒன்னு காட்டனும்...”
“என்னது...”
“நீயே பாரு...” மெதுவாக நந்திதாவை விலக்கி விட்டு எழுந்து சென்றான் உதய்.
ரொமான்டிக்காக எதையோ காட்ட போகிறான் என்ற எதிர்பார்ப்புடன் அவள் இருக்க, கையில் ஒரு ஃபைலுடன் வந்தான் அவன்...
“இதை பாரு...”
ஃபைலை கையில் வாங்கிய நந்திதா அதை திறக்காமலே, “என்னது?” என்றாள் கேள்வியாக!
“திறந்து பாரேன்...”
உதய் நந்திதாவின் பக்கத்தில் உரசியப் படி அமர, நந்திதா கையில் இருந்த ஃபைலை திறந்து பார்த்தாள்.
அங்கிருந்த பேப்பரில் இருந்ததை படித்தவள் உதயை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள்...