(Reading time: 7 - 13 minutes)
Idhayathile oru kanavu (Edition 2)
Idhayathile oru kanavu (Edition 2)

Chillzee Originals : தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 10

   

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

ன்று ஜெயிடம் ‘என்னை மறந்து விடு’ என சொல்லி விட்டு, நேராக சித்ராவிடம் தான் வந்து தஞ்சம் அடைந்தாள் புவனேஸ்வரி.

  

அதற்கு பிறகு அந்த வருடம் அவள் காலேஜிற்கு போகவில்லை. அதற்கு அடுத்த வருடம் சென்றப்போதும் காரில் சென்று காரிலேயே திரும்பினாள்.

  

எதற்காக இந்த ஏற்பாடு என்பது புவனேஸ்வரிக்கு தெரியும், இருந்தாலும் அவள் கண்டுக் கொள்ளவில்லை. ஜெய்யை அவள் வேண்டாம் என்று சொன்னப் பிறகு அவன் மீண்டும் வந்து தொல்லை செய்வான் என்ற கேள்வி கூட அவளுக்கு இல்லை! அவளுக்கு ஜெய்யைப் பற்றி தெரியும். அவளே அவனின் எதிரில் வந்தால் கூட ஒதுங்கி செல்வானே தவிர தொல்லை எதுவும் செய்ய மாட்டான்!

  

ஆனால் ஜெய் கல்லூரி கேம்பஸ் தேர்வில் பங்கேற்காமல் சென்று விட்டான் என்று தெரிந்துக் கொண்டப் போது அவளின் மனம் குற்ற உணர்வில் சுட்டது.

  

ஜெய் நன்றாக இருக்க வேண்டும் என்று அவள் வேண்டாத நாளே கிடையாது!

  

பத்து வருடங்கள் ஓடிப் போய் விட்டது! நினைக்கும் போது அவளுக்கு ஆச்சர்யமாக தான் இருக்கிறது!

  

இதுவரை அவளும் ஜெய்யும் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. அவன் எங்கே இருக்கிறான், என்ன செய்கிறான் எதுவுமே தெரியாது! பத்து வருடங்களுக்கு பிறகு இப்போது தான் முதல் முறையாக அவனைப் பற்றி தெரிந்துக் கொண்டிருக்கிறாள்.

  

பதினேழு வயதில் அவன் மீது தோன்றிய அதே உணர்வு தான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.