“என்னக்கா இப்படி சொல்ற? வேலைக்கு போறதால டைமில்லைக்கா.”
“வேலைக்கு போறீயா??? உனக்கென்ன தெரியும்? எதையும் எடுத்து இந்த பக்கம் அந்தப் பக்கம் வைக்குறதை கூட சரியா செய்ய மாட்ட. இதென்ன அத்தை, இவ புதுசா கதை சொல்றா?”
அதுவரைக்கும் அமைதியாக மொபைலில் மெசேஜுகள் பார்த்துக் கொண்டிருந்த சுரேஷ் இப்போது ராஜேஸ்வரிக்கு பதில் சொன்னார்.
“கதை இல்லை ராஜி. உன் தங்கை சொல்றது உண்மை தான். அவ வேலைக்கு போறா. நீ அவளுக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொல்ற. அவ வேலைக்கு போற இடத்துலயோ இப்படி சுறுசுறுப்பான, வேலையை உடனடியா கத்துக்கிட்ட யாரையும் பார்த்ததே கிடையாதுன்னு புகழ்ந்து தள்ளுறாங்க!”
ராஜேஸ்வரியின் முகத்தில் பொறாமையின் அறிகுறிகள் தெரிந்தது.
“நீங்க ரெகமன்ட் செய்து வேலை வாங்கி கொடுத்திருப்பீங்க மாமா. அப்புறம் உங்க கிட்ட அவளை பத்தி உண்மையை சொல்ல முடியுமா? இப்படி தான் புகழ்ந்து தள்ளுவாங்க. புவனேஸ்வரியைப் பத்தி எனக்கு தெரியாதா என்ன? அவளுக்கு எதுக்கும் திறமை பத்தாது.”
“இல்லை ராஜி, புவனேஸ்வரியோட திறமைக்கு ஒரு குறைச்சலும் கிடையாது. அவ இப்போ வேலைக்கு போற கம்பெனி சீக்கிரமே அவளுடையதா மாறப் போகுது. அந்த கம்பெனியை நடத்துறவன் என் ஃப்ரென்ட். அவனுக்கு ஒரே ஒரு பொண்ணு தான். அவளும் நியூசிலான்ட்ல செட்டில் ஆயிட்டா. அம்மா, அப்பாவையும் அங்கே வரச் சொல்லி கூப்பிட்டுட்டு இருக்கா. கம்பெனியை வாங்கி நடத்த நல்ல ஆளு இருந்தா சொல்ல சொன்னான். நான் முன்னாடியே