தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 58 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
மற்றவர்களின் மன ஓட்டம் புரிந்ததோ என்னமோ, “நந்திதா, எங்க ஃபேமிலி ஃப்ரென்ட் ஒருத்தங்க இரண்டு நாள்ல வருவாங்க... நீங்க இரண்டு பேரும் எங்கேயாவது போக ப்ளான் செய்திருக்கீங்களா?” என கேட்டு பேச்சை மாற்றினாள் ரேவதி!
“இல்லை... தெரியலை... அ..த்தை... அவர் ஏதாவது ப்ளான் செய்திருக்காரான்னு தெரியலை,” என்றாள் நந்திதா!
“சரி, நான் உதய் கிட்ட கேட்குறேன்... நீயும் அவன் கிட்ட சரவணன் மாமா ஃபேமிலி வராங்கனு நான் சொன்னேன்னு சொல்லு...”
“சரி அத்தை...”
“பூமா எல்லாம் நல்லபடியா சேர்ந்தாங்களான்னு ஃபோன் செய்து கேட்கனும்... நீங்க பேசிட்டு இருங்கக்கா நான் வரேன்,” என்று காமாட்சியிடம் சொல்லி விட்டு அங்கிருந்து சென்றாள் ரேவதி.
“இந்த காலத்திலேயும் லேன்ட்லைன்ல ஃபோன் செய்து பேசுற ஒரே ஜீவன் இவளா தான் இருக்கும்,” என்றபடி ரேவதி செல்லும் திசையை பார்த்த காமாட்சி, அவள் அறையை விட்டு சென்று மறைந்ததும், துளசி, நந்திதா பக்கம் பார்வையை திருப்பினாள்.
“என்ன அது அந்த நெக்லஸ் விஷயம்????”
நந்திதாவும் துளசியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்...
“அது... நெக்லஸ் ரொம்ப நல்லா இருக்கே... அதே போல எனக்கும் ஒன்னு செய்யலாம்னு பார்த்துட்டு இருந்தேன் அத்தை,” என்று சொல்லி சமாளித்தாள் துளசி!
“யாரு நீ???? துளசி கண்ணா பொய் சொல்றதுனா பொருந்த சொல்லனும்... நெக்லஸ் பார்த்து ஆசைப் படுற ஆளா நீ? இப்போ கூட பாரு கல்யாணத்துக்கு கூட கூடுதலா ஒரு சின்ன செயின் கூட போடாம நிக்குற... உன் கிட்ட எத்தனை செயின் இருக்குன்னாவது உனக்கு