(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

நடந்தபடி துளசி சொல்ல, நந்திதா அது காதிலேயே விழாததை போல தோழியுடன் சென்றாள்....

   

✽✽✽

   

தய் - நந்திதா திருமணம் முடிந்து மூன்று நாட்கள் ஆகி இருந்தது...

  

தோழிகள், துளசி, துளசியின் குடும்பம் என ஒவ்வொருவராய் கிளம்பி செல்ல, நந்திதாவின் மனசுக்குள் ஒருவிதமான சஞ்சலம் தோன்ற தான் செய்தது! ஆனாலும் உதயின் அருகாமையில் அவளுக்கு எல்லாமே சுலபமாக தான் இருந்தது..!

  

உதய் எப்போதும் அவளுடனே இருந்தான்... அதுவே அவளுக்கு வேண்டிய சப்போர்ட்டை கொடுத்திருந்தது!

  

“நதி, நிறைய கிஃப்ட் வந்திருக்கே, என்னென்ன கொடுத்திருக்காங்கன்னு பார்ப்போமா???”

  

உதய் குவித்து வைக்கப் பட்டிருந்த பரிசு பொருட்களை காண்பித்து கேட்க, நந்திதா,

    

“நிறைய கிஃப்ட் வந்தது எல்லாம் உங்களுக்கு தான்... எனக்கு வந்தது எல்லாம் கை விட்டு எண்ணக் கூடிய அளவு தான்,” என்றாள் ஈஸியாக!

  

உதய் யோசனை மின்ன அவளை பார்த்தான்!

   

“ஏன் நதி நீ உன் ரிலேடிவ்ஸ் யார் கூடேயும் நீ டச் வச்சுக்கலை???”

  

“ப்ச்... ரொம்ப க்ளோஸ்ன்னு எப்போவும் யாருமில்லை உதய்... அம்மா தான் ஃபங்ஷன் அது இதுன்னு போவாங்க... அவங்க சொந்தக்காரங்களும் கம்பெனி வித்து, அப்பா இறந்தப்புறம் அவ்வளவா வரலை... ஏதாவது ஹெல்ப் கேட்ருவோம்னு பயந்துட்டாங்க போலருக்கு... ப்ச்.... அவங்களை விடுங்க... வாங்க உங்க கிஃப்ட்ஸ் பார்ப்போம்...”

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.