(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

“அப்பாடியோ... எப்படியோ ஆன்ட்டி சரியான நேரத்துல வந்து ஹெல்ப் செய்தாங்க... ஷீ இஸ் அ லவ்லி கேரக்டர் ஒசிமம்,” என்றாள் நந்திதா மெச்சுதலாக!

  

“ஆமா... அத்தை ரொம்ப நல்லவங்களும் கூட... பாரேன்... லண்டன்ல இருந்து ரெடி ஆகி வந்த ஸ்பெஷல் நெக்லஸ் எப்படி உடைஞ்சதுன்னு ஒரு வார்த்தை கூட கேட்காம, எவ்வளவு டீசன்ட்டா போறாங்கன்னு... ஆனால் எனக்கு அந்த டீசன்சி எல்லாம் இல்லைடி,” என்றபடி கேலி மின்ன தோழியை பார்த்தாள் துளசி.

  

நந்திதா பதில் சொல்லாமல் பாதியில் விட்டு வந்திருந்த கூந்தலை பின்ன தொடங்கினாள்...

  

“என்னடி பேச்சையே காணும்???”

  

“எல்லாம் உன்னால வந்தது தான் துளசி... நீ தானே அந்த நெக்லஸை எனக்கு போட்டு விட்ட அதனால தான் எல்லாம்...”

  

டிப்பாவி...”

  

துளசியை தொடர்ந்து மேலே பேச விடாமல்,

  

“ரொம்ப பசிக்குது ஒசிமம்... சாப்பிடலாம் வாயேன்... நானே போய் சாப்பாடு தாங்கன்னு கேட்க முடியுமா... நீயும் என்னோட வா, எனக்கு கம்பெனி கொடு,” என்றாள் நந்திதா.

  

“அது சரி...! நேத்து வரைக்கும் சாப்பிட கூட டைம் இல்லை... இப்போ உனக்கு பசிக்குது????”

  

“பசிக்குது என்ன செய்ய? இதுக்கு எல்லாம் இனி நான் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் போட முடியுமா... வா ஒசிமம்...”

  

“வரேன் வரேன்.... ஆனாலும் எஸ்கேப் ஆகிட்டேன்னு நினைக்காதே... என் கிட்ட என்னைக்காவது மாட்டுவ அப்போ அந்த நெக்லஸ் பத்தி கேட்குறேன்...”

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.