நந்திதாவிற்கு உறவினரை பற்றி பேசுவது பிடிக்கவில்லை என்பது புரிய, மேலே அந்த பேச்சை தொடராமல் விட்டான் உதய்.
“அதென்ன என் கிப்ஃட்ஸ் மட்டும் பார்ப்போம்னு சொல்ற?”
“எனக்குன்னு வந்ததுல, நாகு என்ன கொடுத்தாங்கன்னு தான் பார்க்கனும்... மத்தபடி என் ஃப்ரென்ட்ஸ் என்ன கொடுத்தாங்கன்னு எனக்கே தெரியும்...”
“அதெப்படி தெரியும்???”
“என் கிட்ட என்ன வேணும்னு கேட்டு தான் கொடுத்தாங்க...”
“ஓ... ஹ்ம்ம்ம்...”
“மனு கொலுசு செட் வாங்கினா, அபி காஸ்மெடிக் கிட், அருணா வளையல், துளசி ஐபோன்...”
“ஓ...”
“எனக்கு பிடிச்சதா தான் வாங்கி தந்தாங்க...”
“ஓகே... சரி வா போகலாம்...”
புரியாமல் விழித்த நந்திதா, “எங்கே போகனும்???” என்றாள்!
“கடைக்கு போகலாம் நதி...”
“கடைக்கா??? இப்போ எதுக்கு???”
“சும்மா தான் நதி டியர்... வீட்டிலேயே அடைஞ்சு கிடந்து போர் அடிக்குதுன்னு கிஃப்ட்ஸ் பார்க்கலாம்னு நினைச்சேன்...”