(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

தெரியுமா?”

  

“அது அது... இல்லை அத்தை...”

  

“சரி சரி... விடு... என்ன விஷயம்... அதை சொல்லு...”

  

இதற்கு மேல் மறைப்பது வீண் என்பது புரிந்து, கையில் இருந்த நெக்லஸை நேராக விரித்து வைத்து, அது உடைந்திருந்த பகுதியை சுட்டிக் காட்டிய துளசி,

  

“இது தான் விஷயம்,” என்றாள்.

  

“எவ்வளவு அழகான வேலைபாடெல்லாம் வச்சிருக்காங்க... இவ்வளவு கேர்லஸாவா இருப்பீங்க??? இது தானா விஷயம்???? சரி என் கிட்ட கொடு... நான் நம்ம பிகே ஜுவல்லரில கொடுத்து சரி செய்து தரேன்...”

  

காமாட்சியிடம் நெக்லஸை கொடுத்த துளசி, “எவ்வளவு நல்லவங்க அத்தை நீங்க...! உங்களுக்கு தான் உலகத்திலேயே பெஸ்ட் அத்தை அவார்ட் கொடுக்கனும்... அடுத்த ஜென்மத்துல நான் மாமியாரா பிறக்குறேன் நீங்க மருமகளா வாங்க... என்னோட நன்றி கடனை அடைக்குறேன்,” என்றாள் சிரிப்பு மின்ன!

  

“வேண்டாம்மா வேண்டவே வேண்டாம்... அடுத்த ஜென்மத்திலேயாவது நான் ஒரு சண்டை சச்சரவுன்னு இருக்க குடும்பத்துல பிறந்து கொஞ்சம் என்டர்டெயின்மென்ட்டோட இருக்கேன்,” என்று துளசியிடம் அவள் பாணியிலேயே பதில் சொன்ன காமாட்சி, நந்திதாவிடம்,

  

“இரண்டு, மூணு நாள்ல சரி செய்து தர பார்க்குறேன் நந்து... அது வரைக்கும் ரேவதிக்கு விஷயம் தெரியாம பார்த்துக்கோ,” என்று சொல்லி விட்டு அறையில் இருந்து சென்றாள்.

  

நந்திதாவை பார்த்து புன்னகைத்த துளசி,

  

“என்னடி உன் பிரச்சனை சால்வ்டா???” என்றாள்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.