Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 60 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
”நல்ல பாட்டா வை“
”எனக்குத் தெரியும் சீக்கிரமா சாப்பிடுங்க” என அதட்ட அவனும் சாப்பிடலானான். அவளோ அவனது போனை நோண்டினாள்.
அதில் அவன் விதவிதமாக எடுத்துக் கொண்ட செல்பி போட்டோக்களைக் கண்டு சிரிப்பதா வெறுப்பதா என்றே தெரியாமல் நொந்துப் போய் பாடல்களை தேடினாள். ஒன்று கூட இல்லை இருந்த ஒரே பாட்டு ஜனனியின் பாட்டுதான், அதைக் கண்டு நொந்துப் போனவள்
”இதுல பாட்டுக்களே இல்லையே”
”விடு இந்த ரிங்டோனே நல்லாயிருக்கு”
”முடியாது நான் வேற மாத்தறேன்“
”என்னிக்கு நான் சொன்னதை நீ கேட்டிருக்க, என்னவோ செய், நான் சாப்பிட்டேன், போய் தூங்கறேன்“
”மருந்து சாப்பிடலையா”
”இது வேறயா, எங்க இருக்கு“
”உள்ள இருக்கு, பார்த்து எடுத்து சாப்பிடுவீங்கள்ல, நான் வரனுமா என்ன“
”வேணாமா நீ வராத ஆமா நீ எங்க படுத்து தூங்குவ”
“உள்ளதான்“
”ரெண்டு பேரும் ஒண்ணாவா, வேணாம், நான் சோபாவில படுத்துக்கறேன் நீ உள்ளயே படுத்துக்க“