Idhayathile oru kanavu - Tamil thodarkathai
Idhayathile oru kanavu is a Chillzee Original Family / Romance genre story.
கதை சுருக்கம்:
பத்து வருடங்களுக்கு முன் ஜெய் மீதான தன் காதலை வேண்டாம் என்று மறுத்து விட்டாள் புவனேஸ்வரி.
இருவரும் மீண்டும் சந்திக்கும் போது அவர்கள் இருவரின் நிலையும் தலைக் கீழாக மாறி இருக்கிறது. புவனேஸ்வரி இப்போதும் தன் மனதில் கனவாக ஜெய் மீதான காதலை தொடர்ந்துக் கொண்டே இருக்கிறாள். ஆனால் ஜெய் அவள் பக்கமே வராமல் தவிர்க்கிறான்.
தடுமாறும் மனநிலைக் கொண்டு, தன்னையும் தன் காதலையும் வேண்டாம் என்ற புவனேஸ்வரி தனக்கும் வேண்டாமென்று என்று ஜெய் இப்போது நினைக்கிறான்.
புவனேஸ்வரியின் மனதில் இருக்கும் காதலும், ஜெய்யின் மனதில் இருக்கும் கோபமும் நேருக்கு நேர் மோதும் போது, எது ஜெயிக்கும்? காதலா, கோபமா?
-
Chillzee Originals : தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 01
அப்படியே அவளின் கன்னத்தில் உதடுகளைப் பதித்தவன் முதல் முறையாக உப்பு சுவையை உணர்ந்தான். இதென்ன அவனுடைய புவனேஸ்வரி இனிக்காமல் உப்பு கரிக்கிறாள்?
-
Chillzee Originals : தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 02
“யார் வாழ்க்கை எப்படி இருக்கும்னு அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். அவன் புவனேஸ்வரிக்கு என்ன யோசனை வச்சிருக்கானோ தெரியலையே?"
-
Chillzee Originals : தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 03 - Chillzee
அவளுக்கேற்ற பிரின்ஸ் சார்மிங் வருவான் என்ற நம்பிக்கை புவனேஸ்வரிக்கு இருந்ததோ இல்லையோ, சித்ராவிற்கு இருந்தது.
-
Chillzee Originals : தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 04
சிலு சிலு என காற்று அவளை தீண்டிப் போனது. காற்றின் தீண்டல் பல வருடங்களுக்கு முன் அவளின் மனதை கொள்ளைக் கொண்ட ‘அவனின்’ தீண்டலை நினைவுப் படுத்தியது.
அவன் எங்கே இருக்கிறான்? அவளை பற்றி எப்போதாவது யோசிப்பானா?
-
Chillzee Originals : தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 05 - Chillzee
புவனேஸ்வரி அந்தப் பார்வையை எதிர்பார்த்தவள் போல அத்தையின் பார்வையை நேராக, அமைதியாக எதிர் கொண்டாள். சித்ராவிற்கு ஓரளவிற்கு நிம்மதி ஏற்பட்டது. ஆனால் கணவன் மேலே கோபமாக வந்தது.
“அவனோட தங்கச்சி வீட்டுக்கு எல்லாம் புவனேஸ்வரியை எதுக்கு அனுப்பி வைக்குறீங்க?” சித்ரா சுள்ளென்று கணவரிடம் எரிந்து
... -
Chillzee Originals : தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 06 - Chillzee
இந்த கடிதத்தை அவன் கொடுத்தப் போதே அத்தையிடம் பேசி அறிவுரை கேட்டிருந்தால் ஜெய்யின் இதயத்தை நொறுக்க அவசியம் இல்லாமல் போயிருக்குமோ?
-
Chillzee Originals : தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 07 - Chillzee
“உங்களுக்கு எதுக்கு ரோட்டுல போற ரவுடிங்க கூட எல்லாம் பேச்சு?” சித்ரா கணவரிடம் சொன்னது காதில் விழவும் மீண்டும் கோபத்துடன் அவர்கள் பக்கம் ஒரு அடி எடுத்து வைத்தான் ஜெய்.
-
Chillzee Originals : தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 08 - Chillzee
புவனேஸ்வரி அதைப் பற்றி எதுவும் யோசித்திராததால் திகைத்து விழித்தாள். சித்ராவால் அதைப் புரிந்துக் கொள்ள முடிந்தது. கனவு உலகில் இருக்கும் புவனேஸ்வரி நிஜ வாழ்க்கையை புரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதை சித்ரா உணர்ந்துக் கொண்டாள்.
-
Chillzee Originals : தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 09 - Chillzee
புவனேஸ்வரியிடம் அது வரை ஒருவரும் இப்படி கோபப் பட்டது கிடையாது! ராஜேஸ்வரி அவளை மட்டம் தட்டுவாள் ஆனால் அது இப்படி இல்லை!
ஜெய் காட்டிய கோபம் புவனேஸ்வரிக்கு புதிதாக இருந்தது. அன்பும், காதலும் கலக்க பேசுபவனால் இப்படி கோபமும் பட முடியும் என்பதை அவளால் நம்பக் கூட முடியவில்லை!
-
Chillzee Originals : தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 10 - Chillzee
பத்து வருடங்கள் ஓடிப் போய் விட்டது! நினைக்கும் போது அவளுக்கு ஆச்சர்யமாக தான் இருக்கிறது!