Chillzee Originals : தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 05
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
புவனேஸ்வரியால் கண்ணில் பார்ப்பதை நம்பவே முடியவில்லை.
அவளின் இதயத்தின் துடிப்பு அதிகமானது. அதன் லப் டப் ஓசை அவளின் காதுகளுக்கே கேட்பதாக அவளுக்கு பிரமை ஏற்பட்டது.
யோசிக்காமல் ஷோகேஸ் கண்ணாடியை திறந்து அந்தப் ஃபோட்டோவை கையில் எடுத்தாள்.
பத்து வருடங்களுக்கு முன் அவள் பார்த்திருந்த ஜெய்க்கும் ஃபோட்டோவில் இருப்பவனுக்கும் சில மாற்றங்கள் இருந்தது. ஆனால் அந்த முகத்தை எப்படி அவளால் அடையாளம் கண்டுக்கொள்ளாமல் இருக்க முடியும்!
இப்போது அவன் அணிந்திருந்த கண்ணாடி, முகத்தில் வந்திருந்த தெளிவு, நிமிர்வு என அனைத்தும் ஏற்கனவே ஆணழகனாய் இருப்பவனை இன்னும் எடுப்பாக காட்டியது.
புவனேஸ்வரியின் விரல்கள் ஆசையும், காதலுமாக ஃபோட்டோவில் இருந்த ஜெய்யின் உருவத்தை வருடியது.
ஆனால், ஜெய் எப்படி இங்கே? புவனேஸ்வரிக்கு குழப்பமாக இருந்தது.
“சாரிப்பா புவனேஸ்வரி. பசங்க செல்லம் கொஞ்சி முடிக்க மாட்டேங்குறாங்க. என்ன செய்ற?” ஆருத்ரா புவனேஸ்வரியின் கையில் இருந்த ஃபோட்டோவை வாங்கினாள்.
“இது எங்க ஃபேமிலி ஃபோட்டோப்பா. இவர் தான் என் ஹஸ்பன்ட். இது என் அப்பா அம்மா, இது அவரோட அப்பா அம்மா, இவன் என் அண்ணன்.”