(Reading time: 7 - 13 minutes)
Idhayathile oru kanavu (Edition 2)
Idhayathile oru kanavu (Edition 2)

தெரிஞ்சிருக்கலாம். அவனும் அங்கே தான் படிச்சான்.”

   

“ஜெ---ய---மு---ரு---க---ன்--- பேரு கேள்விப்பட்ட மாதிரி இருக்கு. அதனால தான் எனக்கு பரிச்சயமானவரா தெரிஞ்சாரு போலருக்கு!” பாதி உண்மையும், பாதி பொய்யுமாக பதில் சொன்னாள் புவனேஸ்வரி.

   

ஜெய்யின் பெயரை உணர்ந்து உச்சரித்தப் போது அவளுக்குள்ளே உயிர் வரை இனித்தது!

   

“வர சண்டே, என் அம்மா, அப்பா, ஜெய் எல்லோரும் வீட்டுக்கு வராங்க. என் பசங்களை பார்க்காம அவங்க மூணு பேரால ஒரு மாசம் கூட இருக்க முடியாது! நீ உட்கார்ந்து டீ குடிப்பா. நான் என் பொண்ணை கூட்டிட்டு வரேன்.” ஆருத்ரா புவனேஸ்வரிக்கு டீ, ஸ்நாக்ஸ் என்று எல்லாம் கொடுத்து உபசரித்து விட்டு சென்றாள்.

   

ஆவி பறக்கும் டீயை உதட்டில் பதித்தாள் புவனேஸ்வரி. அவளுடைய மனம் இருந்த மனநிலைக்கு ஏற்ப அது இனித்தது.

   

ஜெய்! அவளுடைய ஜெய்! இங்கே வரப் போகிறான்!

   

மூன்று நாட்களில் இதோ இதே இடத்தில் அவனும் இருப்பான்!

   

நினைக்கும் போதே அவளுடைய மனம் குளிர்ந்து உருகியது! கன்னங்கள் சூடாகி நிறம் மாறியது!

   

✽✽✽

   

“ஜெயமுருகனா? யாரைச் சொல்றீங்க?” சித்ராவின் கேள்வியில் சேர்ந்திருந்த கடினத்தன்மை சுரேஷை அவள் பக்கம் பார்க்க வைத்தது.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.