Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 55 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
கீதாவை தன்னிடம் வைத்துக் கொண்டான். கீதாவோ தில்லையின் உடலில் உருவான காயத்திற்கு போடப்பட்ட கட்டை தடவிக் கொண்டிருக்க அதைக் கண்ட ஜனனியோ
”கீதா அப்படி செய்யாத, தில்லைக்கு வலிக்கும் வெளிய போய் விளையாடு போ”
”அம்மா தில்லைக்கு பசிக்குதாம், பால் வேணுமாம்”
”நான் பார்த்துக்கிறேன் நீ போ” என விரட்ட அவளும் வெளியே ஓடினாள்.
அவள் சென்றதும் தில்லையிடம் வந்தான் சிவா
”நேத்தெல்லாம் இங்கதான் இருந்தியா”
”ஆமாம் நீ எப்ப வந்த“
”இப்பதான் உள்ள வந்தேன், நீ வந்த விசயத்தை ஜனனி சொன்னா, உடனே உன்னை பார்க்கலாம்னு வந்தேன், என்னடா இப்படி இருக்க”
”ஒண்ணுமில்லை சரியாயிடும்”
”உன் ஆளுங்க சொன்னாங்க ரவியை தலைமறைவாக்கிட்டேன்னு”
“ஆமாம்“
“அப்ப சேகர் எங்க, அவனையாவது என்கிட்ட கொடுடா, அவனையும் கொன்னுட்டு தலைமறைவுன்னு சொல்லிடாத”
”முடியாது அவனால எனக்கு ஆக வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு, அவன் என் கஸ்டடியிலதான் இருப்பான்.”