(Reading time: 6 - 12 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

   

”நீங்க பேசிக்கிட்டு இருங்க, நான் போய் காபி போட்டு கொண்டு வரேன்” என சொல்லிவிட்டு சென்றுவிட சிவாவோ தில்லையிடம்

   

”தில்லை என்னாச்சி”

   

”ஒண்ணுமில்லை சின்ன தப்பு நடந்துடுச்சி”

   

”தப்புதானே ஆதாரமே இல்லாம அழிக்க வேண்டியது என் பொறுப்பு, முதல்ல போய் ரெஸ்ட் எடு, கொஞ்ச நாளைக்கு நீ வெளிய வராத உன் எதிரிங்க உன் மேல செம காண்டுல இருக்கானுங்க, அவனுங்க கையில நீ மாட்டின அடையாளம் தெரியாத மாதிரி உன்னை சிதைச்சிடுவானுங்க”

   

”என்ன சொல்ற நீ”

   

“சேகர் மாட்டிக்கவும் சில கிரிமினல்ங்க பயத்தில இருக்காங்களாம், ஒண்ணு சேகர் கதையை முடிக்கனும் இல்லை உன் கதையை முடிக்கனும்னு முடிவெடுத்திருக்காங்கன்னு நம்ம விசுவாசியில ஒருத்தன் சொன்னான். இந்தச் சமயம் நீ வீட்டை விட்டு எதுக்காகவும் வெளிய வர கூடாது, என் வீட்டுக்கு நீ இப்படி தனியா வந்ததே தப்பு, யாராவது உன்னை இந்த வீட்ல பார்த்தா உனக்கும் ஆபத்து, எனக்கும் ஆபத்து, என் வேலைக்கும் ஆப்பு வரும், தயவு செஞ்சி நீ கிளம்பு, சேகர் விசயத்தில அவசரப்படாத, பொறுமையா இரு, அப்படியே சேகர் எல்லாத்தையும் சொன்னாலும் வீண்தான், காரணம் சேகர் மாட்டிக்கிட்ட விசயம் தெரிஞ்சதும் கெட்டவங்க எல்லாருமே ஒளிஞ்சிக்கிட்டானுங்க, அவனுங்க இருக்கற இடம் சேகருக்கு கூட தெரியாது”

   

”சரி அதை நான் பார்த்துக்கிறேன், இப்ப நான் கிளம்பறேன்”

   

”சம்யுக்தாவையும் உன் கூட கூட்டிக்கிட்டு கிளம்பு”

   

”அவசியம் இல்லை இனிமேல அவள் என்கூடதான் இருக்கனும்”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.