”இந்த நிலைமையில அவனை பத்தி யோசிக்காத, சேகரை என்கிட்ட விடு, நான் விசாரிக்கிறேன், அவனை பிடிச்சி அடிச்சி கேட்டாலே எவனெவன் எங்க இருக்கான், என்ன செய்றான், என்ன தப்பு நடக்குதுன்னு ஆதாரத்தோட சொல்லிடுவான், இதுவரைக்கும் நீ செஞ்சது போதும், இனிமேல நான் செய்துக்கிறேன் நீ ஓய்வெடு”
”முடியாது என் உயிருக்கு ஆபத்து இருக்கு, என்னை கொல்ல சில பேர் அலையறாங்க, அவங்களை கொல்ற வரைக்கும் நான் ஓயமாட்டேன்”
”வேணாம்டா, நீயே பாரு எப்படியிருக்கன்னு, உடம்பெல்லாம் காயம்”
”என் மேல பரிதாபப்படாத, எனக்குன்டான கடமையை முடிக்கறவரைக்கும் நான் ஓயமாட்டேன்”
”சரி சம்யுக்தாவை பத்தி யோசிச்சியா”
”இந்நேரம் அவள் எங்கயாவது போயிருப்பா” என சொல்ல ஜனனியோ
”அவள் எங்கயும் போகலை, இங்கதான் இருக்கா பக்கத்து ரூம்ல இருக்கா” என அமைதியாக சொல்ல தில்லையோ குழம்பினான்.
”ஏன் அவள் எதுக்காக இங்க இருக்கனும்”
”தெரியலை, காலையில அவளா இங்க வந்தா உன்னைப் பத்தி கேட்டா, நானும் சொன்னேன், அதோட அவளும் அமைதியாயிட்டா மேற்கொண்டு எதுவும் பேசலை, அவள் கண்கள் கலங்கியிருந்துச்சி, என்னாச்சிடா அவளுக்கு நீ என்ன செஞ்ச அவளை” என ஜனனி கேட்க அவனோ அமைதியானான்
”சம்யுக்தாகிட்டேயும் நான் பேசினேன், பதிலே சொல்லாம கவலையா இருந்தா என்னாச்சிடா” என சிவா கேட்க அதற்கும் தில்லையிடம் இருந்து பதில் இல்லை அவனின் அமைதியைக் கண்ட ஜனனியோ சிவாவிடம்