”ஏன் அப்படி”
“அதான் அவள் தலையெழுத்து” என அழுத்தமாக சொல்லியபடியே எழுந்து அறையை விட்டு வெளியேறினான். சிவாவோ அவனது பேச்சால் குழம்பினான்.
அங்கு ஹாலில் சம்யுக்தாவிடம் கீதா விளையாடிக் கொண்டிருந்தாள். சுரத்தே இல்லாமல் சம்யுக்தாவும் அக்குழந்தையிடம் விளையாடினாள். அதைக் கண்ட தில்லையோ அமைதியாகி
”கீதா இங்க வா” என அழைக்க அந்தச் சத்தம் கேட்டு கீதா ஓடிவந்து தில்லையை பிடித்துக் கொண்டாள். சம்யுக்தாவோ அமைதியாக எழுந்து நின்று தில்லையை பார்த்தாள். தில்லையும் அவளை அமைதியாக பார்த்துவிட்டு சிவாவிடம்
”நான் கிளம்பறேன்” என்றான் அது சம்யுக்தாவுக்கும் சேர்த்துதான் என்பது போல் சத்தமாக சொல்ல உடனே சம்யுக்தா தில்லையிடம் வந்து நின்றாள் அமைதியாக, அதற்குள் காபியுடன் ஜனனி வர அதை இருவரும் பருகிவிட்டு அவர்களிடம் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்கள்.
அங்கு வெளியே சித்தனே காத்திருந்தான்
”நீதான் சம்யுக்தாவை இங்க கூட்டிட்டு வந்தியா” என கோபமாக தில்லை கேட்க அவனோ அமைதியாகி
”வேற வழி தெரியலைண்ணா, மன்னிச்சிடுண்ணா” என சொல்ல
”என் வண்டி எங்க?”
”அண்ணா உன்னால இப்ப வண்டி ஓட்ட முடியாது, நம்மாளு கிட்ட விட்டேன் அவன் வண்டியை கொண்டு போயிட்டான், நீ வாண்ணா நான் வண்டி ஓட்டறேன் நாம இதுல போகலாம்” என சித்தன் சொல்ல அதில் கோபமாகிய தில்லை வண்டியின் பின் சீட்டில் அமர்ந்துக் கொள்ள சம்யுக்தாவும் கூடவே அவன் பக்கத்தில் அமர்ந்தாள். சித்தனோ வண்டியில்