ஜெய்யை ஆருத்ரா அண்ணன் என்று சொல்லவும் புவனேஸ்வரிக்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது!
ஜெய்க்கு தங்கை இருக்கிறாளா??? வீட்டிற்கு ஒரே மகன் என்று அவளிடம் சொன்னானே??!!
“உங்க அண்ணனா? மீதி எல்லோரையும் கண்டுப்பிடிக்க முடிஞ்சது. இவருக்கும் உங்களுக்கும் நடுவே உருவ ஒற்றுமை எதுவுமே தெரியலை,” புவனேஸ்வரி வழக்கத்திற்கு மாறாக கேள்வி கேட்டது ஆருத்ராவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. அதற்காக அவள் புவனேஸ்வரிக்கு பதில் சொல்லாமல் இல்லை!
“அவன் என்னோட பெரியப்பா பையன்ப்பா. பேரு ஜெயமுருகன். காலேஜ் முடிச்சுட்டு ஊருல எங்க வீட்டுக்கு வந்தான். அப்போ இருந்து அவனும் எங்க வீட்டுலேயே ஒருத்தன் போல ஆயிட்டான். எங்க அம்மா அப்பாக்கு அவன் சொந்த மகன் போலவே தான். இப்போவும் அவன் தான் அவங்களை பார்த்துக்குறான். பெரிய பிஸ்னஸ்மேன். கோடிக்கணக்குல சம்பாதிக்குறான். ஆனால் சின்ன பந்தா கூட கிடையாது!” ஆருத்ரா விலாவரியாக விளக்கம் கொடுத்தாள்.
ஜெய் பிஸ்னஸ் செய்கிறானா?
கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறானா?
புவனேஸ்வரிக்கு கேட்கவே சந்தோஷமாக இருந்தது. ஜெய் எங்கே இருந்தாலும் நலமாக வாழ வேண்டும் என்று தான் அவள் விரும்பினாள்.
“ஏன்ப்பா புவனேஸ்வரி, நீ இந்த ஊரு ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ் காலேஜ்ல தான படிச்ச? அப்போ உனக்கும் இவனை