(Reading time: 6 - 11 minutes)
Idhayathile oru kanavu (Edition 2)
Idhayathile oru kanavu (Edition 2)

Chillzee Originals : தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 06

   

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

குட் நைட் அத்தை. எதுக்கு தூங்காம இருந்து டிவி பார்த்துட்டு இருக்கீங்க? டிவியை ஆஃப் செஞ்சுட்டு தூங்குங்க!” புவனேஸ்வரி சொன்னதுடன் நிற்காமல் சித்ராவின் கையில் இருந்த ரிமோட்டை வாங்கி டிவியை அணைத்தாள்.

   

தன் மீது அவளுக்கு இருந்த அக்கறை சித்ராவிற்கு பெருமையாக இருந்தது.

   

அப்படியே புவனேஸ்வரியிடம் சொல்ல நினைத்ததை சொல்ல வாயைத் திறந்தாள். அந்த நேரம் புவனேஸ்வரி தூக்கத்தின் அறிகுறியாக வந்த கொட்டாவியை அடக்குவதை கவனித்து மனதை மாற்றிக் கொண்டாள்.

   

“நீயும் தூங்கு பாப்பா. காலைல வேற நீ வேலைக்கு போகனுமே,” என்றாள் சித்ரா.

   

“சரி அத்தை!”

   

“வேலை எல்லாம் எப்படி இருக்கு?”

   

“கஷ்டமா எதுவும் இல்லை அத்தை. ஈஸியா இருக்கு. வீட்டுக்குள்ளேயே இருக்காம வேலைன்னு வெளியே போறது நல்லா இருக்கு.”

   

அதை சொல்லும் போது புவனேஸ்வரியின் முகம் மலர்ந்த விதம் சித்ராவிற்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

   

“நான் இதை முன்னாடியே யோசிச்சிருந்திருக்கனும்! உன் அப்பாவை இரண்டு வருஷத்துக்கு முன்னாடியே ஊட்டிக்கு அனுப்பி இருந்தா இவ்வளவு கடனும் வந்து சேர்ந்திருக்காது!”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.