(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 52 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

தய் அப்போதும் அசையாமல் நந்திதாவையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த பார்வையை தாங்க முடியாமல் பேச்சை மாற்ற,

   

“ம்ம்ம்ம்... சாரீக்கு ரொம்ப தேங்க்ஸ் உதய்... எனக்கு ஷாப்பிங் மேல ரொம்ப இன்ட்ரஸ்ட் எல்லாம் கிடையாது... ஆனா அந்த புடவை ரொம்ப பிடிச்சிருந்தது... எது என்னமோ ஒரு தனி ஸ்பெஷலா எனக்கு தெரிஞ்சது,” என்றாள்.

   

அவள் என்ன செய்ய விரும்புகிறாள் என்பதை புறிந்துக் கொண்டன் அறிகுறியாக உதயின் கண்ணில் மெல்லிய ‘பளிச்’ வந்துப் போனது. ஆனால் அதைப் பற்றி பேசி அவளை ‘டீஸ்’ செய்யாமல், நிமிர்ந்து அமர்ந்தவன், “உனக்கு அது பிடிச்சிருந்தது எனக்கும் புரிஞ்சது நதி,” என்றான் மென்மையாக.

   

அவனின் செய்கை நந்திதாவிற்கும் புரிந்து அவளுக்கு மிகப் பெரிய இனிய உணர்வை கொடுத்தது! அவளை, அவளின் உணர்வை மதிக்க தெரிந்தவன் இவன்! 

   

இலகுவாகி விட்ட மனதுடன், “ப்ச்... ஆனால் என்ன செய்றது... இந்த அழகு புடவையை பத்தோட பதினொன்னா பெட்டில வைக்க வேண்டியது தான்,” என உதய் மேஜை மீது வைத்திருந்த சேலை பாக்ஸை காண்பித்து சொன்னாள் நந்திதா!

   

“ஏன்?”

    

“என்ன ஏன்? கல்யாணத்துக்கு ஒவ்வொரு ப்ரோக்ராமுக்கும் அத்தையும், ஆன்ட்டியும் சாரீஸ் செலக்ட் செய்திருக்காங்க...”

   

“அது இருக்கட்டும்... அதெல்லாம் வேற... என் நதி ஆசைப் பட்ட இந்த சாரீயை நாம ஸ்பெஷல் ஆக்கிடுவோம்...”

   

“எப்படி?” என்றாள் நந்திதா ஆர்வத்துடன்

   

“கல்யாணம் வரைக்கும் எல்லாத்துக்கும் புது சாரீ வாங்கினாங்க சரி... கல்யாண நாள் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.