“ஆக்ச்சுவலி நீ மட்டுமில்லை நானும் கூட கடனாளி தான்... அப்போ கொஞ்சம் முன்னாடி வெட்கப் பட்டுட்டே சிரிச்ச பார், அப்போ உதய் ரூல்ஸ் படி நான் உன்னை கிஸ் செயதிருக்கனும்... சரி உன்னை பயமுறுத்த வேண்டாம்னு விட்டேன்... பட் டோன்ட் வொர்ரி, கல்யாணத்துக்கு அப்புறம் அதையும் டேலி செய்திடுறேன்,” என்றான் உதய்.
அவர்கள் இருவரும் வருவதை கவனித்த துளசி,
“அப்பாடியோ ஒரு வழியா வந்து சேர்ந்தீங்களா?” என்றுக் கேட்டுக் கொண்டே வெட்கத்தில் சிவந்து மின்னிக் கொண்டிருந்த நந்திதாவை கேள்வியாக பார்த்தாள்.
“உனக்கு என்னடி ஆச்சு???”
நந்திதாவிற்காக ப்ராக்ஸி கொடுப்பவனாக, “ஒண்ணுமில்லை அண்ணி... உங்க ஃப்ரென்ட்க்கு பிஸ்னஸ் ட்ரான்ஸாக்ஷன்ஸ் பத்தி ஒன்னும் தெரியலை... அதை தான் எடுத்து சொல்லிட்டு இருந்தேன்,” என்றான் உதய்.
“பிஸ்னஸ்??? நீங்க இரண்டு பேரும்????”
துளசி கேலியாக கேட்க, அவளுக்கு சிரிப்பை பதிலாக கொடுத்து விட்டு நந்திதாவை விழுங்குவது போல மீண்டும் ஒரு பார்வை பார்த்து விட்டு சின்ன கன் சிமிட்டலோடு விடை பெற்றான் உதய்...
அவன் செல்வதையே மலர்ந்த முகத்துடன் பார்த்துக் கொண்டு நின்றாள் நந்திதா...
“பிஸ்னஸ் வுமன்... எனக்கு கால் வலிக்குது... வரீங்களா????”
துளசியின் குரலில் பார்வையை திருப்பிய நந்திதா, மீண்டும் ஒருமுறை உதய் சென்ற திசையை பார்த்து விட்டு தோழியுடன் நடந்தாள்...
அவளின் மனம் முழுக்க வருங்கால வாழ்க்கையை நினைத்து கலர் கலர் கனவுகள்..!