(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

அன்னைக்கு நைட்க்காக வாங்கினாங்களா???”

   

இல்லை என்று தலை அசைத்த நந்திதாவின் கண்கள் தானாக மேஜை பக்கம் தழைந்துக் கொண்டது...

   

“ஸோ... தேர் யூ கோ... நம்ம ஸ்பெஷலா இந்த சாரீயை யூஸ் செய்துக்கோ...”

   

நந்திதா உதயை நேராக பார்க்காமலே தலையை மட்டும் ஆட்டினாள்!

   

“இந்த சாரீல நீ தேவதை மாதிரி இருப்ப... தங்க தாரகை...”

   

நந்திதாவால் உதயை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை... அமைதியாக தலை குனிந்தே அமர்ந்திருந்தாள்...

   

“நதி...”

   

“ம்ம்ம்...”

   

“அந்த டேபிள்ல என்ன தேடுற நதி??? சொல்லு அதையும் வாங்கிடுவோம்...”

   

“உங்களை...” என்று சொல்லி விட்டு முகத்தை நிமிர்த்தி அவள் சிரிக்க, உதய் அவளை விழுங்கி விடுவது போல பார்த்துக் கொண்டிருந்தான்...

   

“அண்ணி சொல்றது ரொம்ப சரி... நாம இப்படி தனியா மீட் செய்றது நல்லதே இல்லை... என் ஹார்ட் தாங்கவே தாங்காது... எப்போடா கல்யாணம் முடியும்னு இருக்கு நதி...”

   

அவளுக்குள்ளும் அதே போன்ற உணர்வு தான்.... ஆனால் அதை சொல்லாமல்,

   

“ம்ம்ம்ம்.... அதெல்லாம் அப்புறமா பேசலாம்... உங்க அண்ணியை ரொம்ப நேரம் இப்படி வெயில்ல நிக்க விட்டீங்கன்னு உங்க அண்ணனுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்,” என்று மீண்டும் பேச்சை மாற்றி விட்டு எழுந்தாள் நந்திதா...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.