“அப்பா பாவம் அத்தை. அவர் வளர்ந்த விதம் அப்படி!”
“என்ன அப்படி வளர்ந்தாரு? நானும் அதே வீட்டுல தானே வளர்ந்தேன். அப்போ எல்லாம் பையன்னா ஸ்பெஷல் கவனிப்பு உண்டு. எங்க அப்பாவை விட எங்க தாத்தா பாட்டி தான் தலையில தூக்கி வச்சுட்டு அண்ணனை செல்லம் கொஞ்சுவாங்க. அதான் இப்போ இங்கே வந்து நிக்குது!”
“அவர் அப்படியே இருந்துட்டுப் போகட்டும் அத்தை. ஊட்டில எப்படி இருக்காருன்னு தெரியலை.”
“எல்லாம் நல்லா தான் இருக்காரு. இன்னைக்கு ஃபோன்ல பேசினாரு. அங்க வீடெல்லாம் பிடிச்சிருக்காம். உன்னை பத்தியும் விசாரிச்சாரு. நீயும் டைம் கிடைக்கும் போது பேசு.”
“சரி அத்தை.”
“குட் நைட் பாப்பா”
“குட் நைட் அத்தை!”
சித்ராவுடைய வாழ்த்தை ஏற்றுக் கொண்டு அறைக்குள் வந்தாள் புவனேஸ்வரி. அவளுக்கு எங்கிருந்து ‘குட் நைட்’ வரும்? மற்ற நாட்களில் ஜெய் ஞாபகம் வந்தால் அதை மறக்க கையில் கிடைக்கும் புத்தகத்தை எடுத்து வாசிப்பாள். அப்படியே தூங்கியும் போவாள். ஆனால் இன்று அவளே ஜெய் பற்றி யோசிக்க விரும்பினாள்.
கதவு தாளிடப் பட்டிருப்பதை உறுதி செய்துக் கொண்டு அவள் துணிகளின் நடுவே மறைத்து வைத்திருந்த சின்ன கார்ட்போர்ட்