(Reading time: 6 - 11 minutes)
Idhayathile oru kanavu (Edition 2)
Idhayathile oru kanavu (Edition 2)

பெட்டியை கையில் எடுத்தாள். பெட்டியின் மேலே இருந்த பிரவுன் கவரை மெதுவாக விலக்கினாள். பச்சை நிற பெட்டியும், மூடியும் தெரிந்தது. அந்த மூடி மேலே எழுதப் பட்டிருந்த with everlasting love, Jai என்ற வார்த்தைகளை மெல்ல வருடினாள்.

   

அப்படியே மெதுவாக மூடியை திறந்தாள். உள்ளே சில காகித கடிதங்கள் இருந்தது. பழைய நினைவுகளின் நறுமணம் அவளை சூழ்ந்துக் கொண்டது. புவனேஸ்வரி அவ்வப்போது அதிகமாக எடுத்துப் படிக்கும் ஒரே ஒரு கடிதம் மற்றவற்றை விட அதிகம் கசங்கி இருந்தது.

   

அது தான் அவளுக்கு மிகவும் பிடித்த லெட்டர். ஜெய் அவளுக்கு முதல் முதல் எழுதிய லெட்டர். லெட்டரை பிடித்திருந்த அவளின் கை நடுங்கியது. மெல்ல அதை திறந்தவள், கடைசியாக இருந்த with love, Jai என்பதை மீண்டும் தன் விரல்களால் வருடினாள்!

   

அவளுக்கு பரிச்சயமான புன்னகையும், குறும்புத் தனமும் நிறைந்த ஜெயின் முகம் அவளின் கண் முன் தோன்றியது.

   

✽✽✽

   

புவனேஸ்வரி கல்லூரி முதல் ஆண்டு படித்துக் கொண்டிருந்தப் போது அதே கல்லூரியில் ஒரு வருட போஸ்ட் கிரேட்ஜுவேட் டிப்ளோமோ இன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்க வந்தவன் ஜெய்.

   

மற்ற வெளியூர் மாணவர்களை போல அவன் ஹாஸ்டலில் தங்கவில்லை. பணப் பற்றாக்குறை காரணமாக அந்த ஊரில் பெரிய தோட்டம் வைத்திருந்த ஷண்முகராஜன் என்பவருக்கு தோட்டத்தில் உதவும் வேலையில் சேர்ந்திருந்தான். ஷண்முகராஜனே அவனுக்கு தங்கும் வசதியும் செய்துக் கொடுத்திருந்தார்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.