(Reading time: 7 - 13 minutes)
Idhayathile oru kanavu (Edition 2)
Idhayathile oru kanavu (Edition 2)

Chillzee Originals : தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 04

   

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

புவனேஸ்வரி அத்தை வீட்டில் அவளுக்காக கொடுக்கப்பட்ட ரூமில் இருந்த ஜன்னலை திறந்து வைத்தாள். சிலு சிலு என காற்று அவளை தீண்டிப் போனது. காற்றின் தீண்டல் பல வருடங்களுக்கு முன் அவளின் மனதை கொள்ளைக் கொண்ட ‘அவனின்’ தீண்டலை நினைவுப் படுத்தியது.

   

அவன் எங்கே இருக்கிறான்? அவளை பற்றி எப்போதாவது யோசிப்பானா? 

   

“என்னால உன்னை மறக்க முடியாது ஈஷ்!” அவன் அன்று சொன்ன வார்த்தைகள் இப்போது மீண்டும் அவளின் காதுகளில் ஒலித்தது. 

   

“என்னாலேயும் தான் ஜெய்!” அவளின் உதடுகள் மெல்ல முனுமுனுத்தது.

   

✽✽✽

   

“மொத்தம் 77,235.” புவனேஸ்வரி பேப்பரை ஆருத்ராவிடம் நீட்டினாள்.

   

“கலக்குறீயேப்பா! ஸ்கூல்ல, காலேஜ்ல எல்லாம் நீ படிப்பு புலியா இருந்திருக்கனுமே,” பேப்பரை கையில் வாங்கிக் கொண்டு பேசிய ஆருத்ராவுக்கு வார்த்தைகளால் பதில் சொல்லாமல் புன்னகையால் பதில் சொன்னாள் புவனேஸ்வரி.

   

“தேவைக்கு மேல ஒரு வார்த்தை பேச மாட்டேங்குற புவனேஸ்வரி. என்னால அப்படி இருக்கவே முடியாது. தலை வெடிச்சுப் போயிடும். பேசிட்டே இருந்தா தான் எனக்கு நல்லா இருக்கும்,”

   

இதற்கும் புவனேஸ்வரியின் பதில் புன்னகை மட்டுமே!

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.