(Reading time: 7 - 13 minutes)
Idhayathile oru kanavu (Edition 2)
Idhayathile oru kanavu (Edition 2)

சுரேஷ் எப்போதும் ஸ்ட்ரிக்ட் ஆனவர். அவர் ஆருத்ராவின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளமாட்டார் என்ற நம்பிக்கை புவனேஸ்வரிக்கு இருந்தது.

   

“சுரேஷ் மாமா சொன்னா சரி,” புவனேஸ்வரி சுரேஷின் மீது முடிவெடுக்கும் பொறுப்பை ஒப்படைத்தாள்.

   

“நான் அவர் கிட்ட பேசுறேன்,” முழு எனர்ஜியோடு ஆருத்ரா சொன்னப்போது கூட புவனேஸ்வரிக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால் பதினைந்தே நிமிடத்தில் சுரேஷ் அவளை மொபைலில் அழைத்தார்.

   

“பாப்பா, ஆருத்ரா பேசினா. அவ ரொம்ப நல்ல மாதிரி. நீ அவக் கூட ஃப்ரென்டா பழகினா உனக்கும் நல்லா தான் இருக்கும்,” என்றார் சுரேஷ்.

   

கேள்வியே கேட்காமல், “சரி மாமா,” என புவனேஸ்வரி அமைதியாக அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டாள்.

   

“நீ உன் ஆஃபீஸ்ல இருந்து அவ கூட போ. சித்ரா கோவிலுக்கு போகணும்னு சொன்னா. நான் அவளோட ஆருத்ரா வீட்டுக்கு வரேன். நாம ஒன்னா கோவிலுக்கு போகலாம்.”

   

“சரி மாமா!” புவனேஸ்வரி கிளிப் பிள்ளையைப் போல சொன்னதையே திரும்ப சொன்னாள்.

   

சுரேஷின் பக்கம் சில வினாடிகள் அமைதியாக இருந்தது!

   

பிறகு, “உனக்கு ஆருத்ரா வீட்டுக்கு போறது பிடிக்கலைனா நீ சொல்லலாம் பாப்பா. நான் சொல்றதுக்காக நீ கட்டாயம் போகணும்னு 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.