(Reading time: 7 - 13 minutes)
Idhayathile oru kanavu (Edition 2)
Idhayathile oru kanavu (Edition 2)

கிடையாது,” என்றார் சுரேஷ்.

   

“அப்படி எதுவும் கிடையாது மாமா. எனக்கு இப்படி யார் வீட்டுக்கும் போய் பழக்கம் கிடையாது. அப்பாக்கு அதெல்லாம் பிடிக்காது. அதனால தான் யோசிச்சேன்.”

   

“அப்போ சரி! நீ ஆருத்ரா கூட போ. நானும் அத்தையும் வீட்டுல இருந்து கிளம்பின உடனே உனக்கு மொபைல்ல இன்ஃபார்ம் செய்றோம்.”

   

“சரி மாமா!” சுரேஷ் சொன்னதற்காக ஆருத்ரா வீட்டிற்கு போவது என்ற முடிவுக்கு வந்தாள் புவனேஸ்வரி.

   

✽✽✽

   

“உள்ளே வா புவனேஸ்வரி! காலை பார்த்து வை. பசங்க விளையாட்டுப் பொருளை கண்ணு மண்ணு தெரியாம போட்டு வைப்பாங்க!”

   

ஆருத்ராவின் எச்சரிக்கை இல்லாமல் போயிருந்தால் புவனேஸ்வரி வழியில் இருந்த டாய் காரில் ஸ்கேட்டிங் போயிருந்திருப்பாள்! நல்ல வேளையாக ஆருத்ரா பேச்சை கேட்டு கவனத்துடன் வந்ததால் சிதறி இருந்த விளையாட்டுகளை தவிர்த்து நடந்தாள்.

   

“நீ உட்காருப்பா. நான் இதோ வரேன்.” ஆருத்ரா புவனேஸ்வரிக்கு அங்கே இருந்த குஷன் நாற்காலியை காட்டினாள். புவனேஸ்வரி உட்காரவும், “அத்தை,” என்று குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே சென்றாள்.

   

அந்த வீட்டின் அமைப்பு அழகாக இருந்தது. சுவரில் அடித்திருந்த லைட் க்ரீம் & லைட் லேவண்டர் ஸ்ட்ரைப் பெயின்ட் கண்களுக்கு இதமாக 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.