(Reading time: 6 - 12 minutes)
Idhayathile oru kanavu (Edition 2)
Idhayathile oru kanavu (Edition 2)

Chillzee Originals : தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 09

   

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

ஜெய்யின் காதலை ஆழம் பார்க்க சித்ரா சொன்னதை புவனேஸ்வரி ஜெய்யிடம் சொன்னப் போது, அவன் சூறாவளியாக சீறினான்.

  

“அறிவிருக்கா உனக்கு? உன் அத்தை தான் அறிவில்லாம பேசுறாங்க. நீயும் அதைக் கேட்டு வந்து என் கிட்ட சொல்ற? இங்கே பாரு புவனேஸ்வரி, நான் விரும்புறது உன்னை. உன்னை மட்டும் தான். உன் அப்பா, குடும்பம் இதெல்லாம் எனக்கு முக்கியம் கிடையாது. உங்க குடும்பம் அளவுக்கு இல்லைனாலும் உன்னை சந்தோஷமா வச்சுக்குற அளவுக்கு சம்பாதிக்க என்னால முடியும், அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.”

  

புவனேஸ்வரியிடம் அது வரை ஒருவரும் இப்படி கோபப் பட்டது கிடையாது! ராஜேஸ்வரி அவளை மட்டம் தட்டுவாள் ஆனால் அது இப்படி இல்லை!

  

ஜெய் காட்டிய கோபம் புவனேஸ்வரிக்கு புதிதாக இருந்தது. அன்பும், காதலும் கலக்க பேசுபவனால் இப்படி கோபமும் பட முடியும் என்பதை அவளால் நம்பக் கூட முடியவில்லை!

  

✽✽✽

  

புவனேஸ்வரி புரண்டுப் படுத்தாள்! அன்று எந்த அளவிற்கு அப்பாவியாக இருந்திருக்கிறாள் என்று யோசிக்கும் போது அவளுக்கு இப்போது எப்படியோ இருந்தது!

  

நல்ல வேளை ஜெய் நல்லவன்! ஒருவேளை அவன் மட்டும் கெட்ட எண்ணங்கள் கொண்டவனாக இருந்திருந்தால் அவளின் வாழ்க்கையே மொத்தமாக சீரழிந்துப் போயிருக்கும்.

  

அன்று சித்ராவிடம் வந்து புலம்பித் தள்ளியதை நினைத்துப் பார்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.