(Reading time: 6 - 12 minutes)
Idhayathile oru kanavu (Edition 2)
Idhayathile oru kanavu (Edition 2)

  

“உன் அப்பா செய்ற அலப்பர பத்தி நம்ம எல்லோருக்கும் தெரியும். அதை நாம நமக்குள்ளே ரகசியமா பேசிப்போம். ஜெய் என்ன செய்வான்னு நினைக்குற? உன் அப்பா முகத்துக்கு நேரா அதை சொல்லாம இருப்பானா?”

  

புவனேஸ்வரியால் பதில் சொல்ல முடியவில்லை!

   

“உன் அப்பா கண்ணுக்கு ஜெய் ஒன்னும் இல்லாதவனா தெரிவான். ஜெய் கண்ணுக்கு உன் அப்பா பந்தா பேர்வழியா தெரிவார். நடுல இருக்க நீ என்ன செய்வ?”

   

இப்போதும் புவனேஸ்வரி அமைதியாகவே இருந்தாள்!

  

“சரி, நீயும் ஜெய்யும்ன்னு மட்டும் யோசிச்சாலும் அவன் சொல்ற வாழ்க்கை எப்படி இருக்கும்னு உனக்கு தெரியுமா? பசின்னா என்னன்னு கூட தெரியாம வளர்ந்தவ நீ. படிக்க பணம் வேணும்னு வேலைக்கு போறவன் அவன்.”

  

புவனேஸ்வரியால் இப்போது சும்மா இருக்க முடியவில்லை!

   

“ஜெய் என்னை நல்லா பார்த்துப்பான் அத்தை,” என்றாள்!

  

“அதை தான் சொல்றேன் பாப்பா. அவன் உன்னை நல்லா பார்த்துக்க கஷ்டப்படுவான். முதல்ல சுகமா தெரியுற அந்த சுமை கொஞ்ச நாள்ல வலியா தெரிஞ்சா?”

  

புவனேஸ்வரி யோசனையுடன் அத்தையை பார்த்தாள்.

  

“ஜெய் இன்னைக்கு தனிக்காட்டு ராஜா. இஷ்டம் போல வாழுறான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.