தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 18 - பிந்து வினோத்
This is a Chillzee Originals - Princess Novel episode.
- Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
- Visit Chillzee Princess Novels page for other current Chillzee Princess stories.
“ரோஹினி...” திடீரென பக்கத்தில் கேட்ட சாரதாவின் குரலில் உணர்வுப் பெற்றாள் ரோஹினி...
அவளுக்குப் பக்கத்தில் சாரதாவும் எதிரே அஜயும் இருந்தார்கள்...
அஜயின் கண்களில் கேள்வியும், அக்கறையும் இருந்தது...
“என்னாச்சுடா? அஜய் கிளம்புறேன்னு இரண்டு தேவை சொல்லிட்டான்,” என சாரதா சொல்லவும், அஜயை ஒரு பார்வை பார்த்து விட்டு, பின் சாரதா பக்கம் திரும்பி,
“மன்னிச்சுக்கோங்க... என்னவோ யோசிச்சுட்டு இருந்தேன்,” என்றாள் ரோஹினி!
அஜயின் விழிகள் கேள்வியுடன் ரோஹினியின் முகத்தில் அலைந்தது. ஆனால் அங்கே பதில் எதுவும் கிடைக்காததால், “என்ன ஆச்சு? உன் அம்மா அப்பா ஞாபகம் வந்திருச்சா?” என்றான் அக்கறையுடன்!
அவனின் கேள்வியை கேட்டு ரோஹினியின் முகம் வாடியது... அதைக் கவனித்து சாரதா மகனுக்கு விளக்கம் கொடுத்தாள்.
“அவ அப்பா அம்மா தவறிட்டாங்க அஜய்... அம்மா இறந்து கொஞ்ச மாசம் தான் ஆகுது...”
அஜய்க்கு அதிர்ச்சியாக இருந்தது!
“சாரி ரோஹினி... எனக்குத் தெரியாது... ஐ ஆம் சாரி,” என்றான் வருத்தத்துடன்!
“பரவாயில்லை... எதுக்கு சாரி எல்லாம் சொல்றீங்க,” என்றாள் ரோஹினி இயல்பான குரலில்!
அவள் பக்கம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷலான பார்வை ஒன்றை பதித்த அஜய், கண்களாலேயே ரோஹினிக்கு தனிப்பட்ட செய்தி சொல்லி விட்டு கிளம்பினான்...
அதுவரைக்கும் படபடத்துக் கொண்டிருந்த ரோஹினியின் மனதின் சிறகுகள் இப்போது தங்கு