(Reading time: 7 - 13 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

அங்கே ரோஹினி கண் கலங்க இருப்பதை பார்த்ததும் திடுக்கிட்டுப் போனான்...

  

“ரோஹினி??? என்ன கண்ணெல்லாம் கலங்கி இருக்கு?? என்ன? என்னம்மா???”

  

தேன் பாட்டிலுடன் வந்த சாரதா,

  

“அவ பச்சை மிளகாயை கடிச்சிட்டா அஜய்... நல்ல காரமான மிளகாய்... பாவம்,” என்று அவனிடம் சொல்லிக் கொண்டே ஸ்பூனில் தேனை ஊற்றி ரோஹினிக்கு ஊட்டிவிட்டாள்...

  

ஃப்ரிட்ஜில் இருந்த குச்சி ஐஸுடன் வந்த விஜய்,

  

“அதை சாப்பிட்டும் சரி ஆகலைனா, இந்த ஐஸ் சாப்பிடு ரோ,” என்றான்...

  

“எதுக்கும்மா, பச்சை மிளகாய் எல்லாம் போடுறீங்க? இனி மேல் ரோஹினி இருக்க வரைக்கும் மிளகாயே போடாதீங்க,” என்றான் அஜய்!!!!

  

ரோஹினியிடம் கவனத்தை வைத்திருந்த சாரதாவும், விஜயும் அஜயின் பேச்சை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை...

  

ஆனால் ஏற்கனவே ‘2 down’ என்ற கடுப்பில் இருந்த நிரஞ்சனா, அஜயின் பேச்சை வைத்து இப்போது 3யும் down என்பது புரியவும் எரிச்சலுடன் ரோஹினியைப் பார்த்தாள்...

  

யார் இவள்??? எங்கே இருந்து வந்தாள்???

  

என்னவோ உலகத்தில் இல்லாத அதிசயத்தைப் போல இவளை எல்லோரும் கொண்டாடுகிறார்களே, இவளை பற்றி எல்லாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். எதற்காக இங்கே வந்திருக்கிறாள் என்பதை கண்டுப்பிடிக்க வேண்டும்... இவளுக்கு பின்னே என்னமோ மர்மம் இருக்கிறது...

  

மனசுக்குள் யோசித்ததை செய்லாற்றுபவளாக, ரோஹினியின் ‘பச்சை மிளகாய் காரம்’

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.